நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது.
இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பா.ஜ.க-வுக்கே வெற்றி கிடைக்கும் என பெரும்பாலான செய்தி நிறுவனங்கள் கணித்திருக்கிறது. இதனையடுத்து, பா.ஜ.க-வினர் பல்வேறு பகுதிகளில் கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூரிடம் கேள்வி எழுப்பியபோது,
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை நான் நம்பமாட்டேன். பாஜகவினர் எப்படி வேண்டுமானாலும் கொண்டாடட்டும். ஆனால் மக்களின் தீர்ப்புதான் இறுதியானது. நமக்கு நாளை மாலைக்குள் விடை கிடைத்துவிடும் என்று கூறியுள்ளார்.
முந்தைய காலகட்டங்களில் வெளிவந்த கருத்துக்கணிப்புகள் அனைத்து பொய்யாகவே இருந்துள்ளன. 2004-ம் ஆண்டு வந்த கணிப்பினால் பா.ஜ.க என்ன ஆனது என்பது ஊரறிந்த ஒன்று. அது (பா.ஜ.க) ஒரு மூழ்கும் கப்பல். ஆகையால், மூழ்கப்போகும் கப்பல் என்ன செய்தால் என்ன என்று விமர்சித்துள்ளார் சசிதரூர்.