பிரதமர் மோடியின் அரசியல் பேச்சுகளுக்காக பா.ஜ.க சார்பில் நமோ (Narendra Modi) எனும் டிவி சேனல் கடந்து மார்ச் மாதம் தொடங்கப்பட்டது.
தேர்தல் சமயத்தில் கட்டணமில்லா சேனலாக நமோ டிவி ஒளிபரப்பானது. இது தொடர்பாக, தேர்தல் பிரசாரத்துக்காக தொடங்கப்பட்டுள்ள மோடியின் நமோ டிவியை தடை செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு புகார்கள் அளித்திருந்தது.
ஆனால், மத்திய பா.ஜ.க அரசின் கைப்பாவையாகச் செயல்பட்டு வரும் தேர்தல் ஆணையம், எந்தப் புகாருக்கும் செவி சாய்க்காமல் இருந்துவிட்டது.
பா.ஜ.க.,வின் தொழிற்நுட்பப் பிரிவின் மூலமாக நடத்தப்பட்டு, மோடியின் சுய விளம்பரத்துக்காக 24 மணிநேரமும் மோடி புகழ் பாடிய நமோ டிவியின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான கடைசிகட்ட பிரசாரம் கடந்த மே 17ம் தேதி ஓய்ந்ததோடு, நமோ டிவியின் ஒளிபரப்பும் அன்றோடு ஓய்ந்துவிட்டது. இதுதொடர்பாக, நமோ டிவி யாரிடம் அனுமதி வாங்கியது, அதற்கான விதிமுறைகளை யார் வகுத்துக்கொடுத்தது, அது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு இருந்ததா ? என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.