இந்தியா

ஒப்புகைச் சீட்டுகளை எண்ணவேண்டும் : எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை!

ஒப்புகைச் சீட்டுகளை எண்ணவேண்டும் என எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளன.

ஒப்புகைச் சீட்டுகளை எண்ணவேண்டும் : எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதாகவும், ஒப்புகைச் சீட்டுகளை எண்ணவேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை விடுத்துள்ளன.

வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்து முடிவை தங்களுக்கு சாதமாக மாற்றிக்கொள்ள ஆளும் பா.ஜ.க முயல்வதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இன்று டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக்குப் பின்னர் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து, வாக்கு எண்ணிக்கையின்போது முதலில் ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும் வாக்கு எண்ணிக்கையில் மாறுபாடு ஏற்பட்டால் ஒப்புகைச்சீட்டுகள் அனைத்தையும் எண்ணவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துவிட்டு வெளியே வந்த எதிர்க்கட்சியினர், “வாக்கு இயந்திரங்களில் மோசடி நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளோம். தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்தைக் கிளப்புகின்றன” எனக் கூட்டாகப் பேட்டியளித்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், வாக்காளர்கள் எதிர்க்கட்சிகளுக்கு அளித்த வாக்குகள் பா.ஜ.க-வுக்கு பதிவாகியிருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

தலைமைத் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்த பின்னர் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories