இந்தியா

கருத்துக் கணிப்பு: தேர்தல் ஆணையத்தை மறைமுகமாக விமர்சித்த ‘தமிழ்’ பட இயக்குநர்!

தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துக்கணிப்புகள் வெளிவந்திருக்கும் சமயத்தில் தமிழ் திரைப்பட இயக்குநர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கருத்துக் கணிப்பு: தேர்தல் ஆணையத்தை மறைமுகமாக விமர்சித்த ‘தமிழ்’ பட இயக்குநர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத் தேர்தலுக்கான 7 கட்ட வாக்குப்பதிவுகளும் நேற்றுடன் நடந்து முடிந்திருக்கும் நிலையில் நேற்று மாலையே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின.

இந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பான்மையானவை பாஜகவுக்கு ஆதரவாகவே வந்திருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலர் கருத்துக்கணிப்புகளின் மீது நம்பிக்கையில்லை என்றும், மக்களின் கணிப்புக்காக மே 23 வரை காத்திருப்போம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், மோடியின் இசைவுக்கும், பாஜகவின் இசைவுக்கும் தேர்தல் ஆணையம் செயல்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகளும், சர்ச்சை கருத்துகளும் வெளிவந்தன.

தமிழில் நடிகர் சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் படத்தின் இயக்குநர் சி.எஸ். அமுதன், அவரது ட்விட்டரில் அரசியல் சார்ந்த கருத்துகளை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்தும் பதிவிட்டுள்ளார்.

அதில், “கருத்துக்கணிப்பு முடிவுகளை பார்க்கும் போது, தேர்தல் ஆணையம் தான் வெற்றி பெறும்” என்று கிண்டலாக தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாகதான் செயல்படுகிறது என்பதை தனது பதிவின் மூலம் மறைமுகமாக விமர்சித்துள்ளார் சி.எஸ்.அமுதன்.

banner

Related Stories

Related Stories