நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரை பணிகள் முடிவடைந்த நிலையில், மோடி நேற்றே கேதார்நாத்தில் ஓய்வெடுக்க சென்றுவிட்டார்.
கேதார்நாத் கோவிலில் வழிபட்டுவிட்டு, பனிமலையில் உள்ள குகையில் தியானம் செய்ததாக கூறிவிட்டு இன்று காலை பத்ரிநாத்துக்கு புறப்பட்டார்.
பிரதமர் மோடி, ஒரு விளம்பர பிரியர் என்பது ஊரறிந்த செய்தி. அந்த வகையில், அவர் செல்லும் இடமெல்லாம் கட்டாயம் புகைப்பட கலைஞர்களை அழைத்துச் செல்வது வழக்கமான செயல்.
அந்த வகையில், இன்று பத்ரிநாத் சென்ற மோடிக்கு சிவப்புக் கம்பளத்தில் வரவேற்பளிக்கப்பட்டது. மோடியின் வருகையை ஒட்டி அந்த பகுதியில் 360டிகிரி கோணத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.
அப்போது மோடியின் பாதுகாப்புக்கு வந்த காவலர்களில் ஒருவர், இடது பக்கம் இருந்த கேமராவை மறைத்துவிட்டதால் அவரை மோடி கோபம் அடைந்தார். ” கேமராவ மறைக்காதய்யா” என்றபடி காவலரை திட்டி அனுப்புகிறார். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவை கீழே காணலாம்.