இந்தியா

அமித்ஷா பேரணியில் வன்முறை: மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்திற்கு தடை! தேர்தல் ஆணையம் உத்தரவு

மேற்கு வங்கத்தில் அமித்ஷா பேரணியில் வன்முறையை தொடர்ந்து ஒரு நாள் முன்னதாகவே பிரச்சாரத்தை முடித்து கொள்ள அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அமித்ஷா பேரணியில் வன்முறை: மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்திற்கு தடை! தேர்தல் ஆணையம் உத்தரவு
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களவை தேர்தலின் ஏழாவது கட்ட வாக்குப்பதிவையொட்டி , பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா மேற்கு வங்க மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து மே 14-ம் தேதி பிரமாண்ட சாலைப் பேரணியில் அமித்ஷா பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

நடைபெற்ற பேரணி கொல்கத்தா பல்கலைக்கழக வளாகத்தைக் கடந்து சென்றது. அப்போது பல்கலைக்கழக மாணவர்கள் அமித்ஷாவுக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டியதாகக் கூறப்படுகிறது. ‘அமித்ஷா திரும்பிப் போ’ என அவர்கள் கண்டன கோஷமிட்டனர்.

அமித்ஷா பேரணியில் வன்முறை: மேற்கு வங்கத்தில் பிரச்சாரத்திற்கு தடை! தேர்தல் ஆணையம் உத்தரவு

பின்னர் பல்கலைக்கழக வளாகத்தை அமித்ஷா கடந்த சிறிய நேரத்திலேயே பா.ஜ.க தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். காவி உடையணிந்த கும்பல் கல்லூரி நுழைவாயிலை நோக்கி கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். அங்கிருந்து இரு சக்கர வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. நுழைவாயிலை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த மார்பளவு சிலைகள் அடித்து உடைக்கப்பட்டன. இந்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வன்முறைக்கு பா.ஜ.கவினரே காரணம் என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இதனையடுத்து இந்த வன்முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வன்மையாக கண்டித்துள்ளது. மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் டெரிக் ஓபரேன் பாஜக தாக்குதல் நடத்திய வீடியோ ஆதாரங்களை வெளியிட்டார். ஆதாரங்களுடன் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள மத்திய படையை பாஜகவினர் இயக்குவதாகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் மே 17 ம் தேதிக்கு பதிலாக மே 16ம் தேதி இரவு 10 மணியுடன் பிரச்சாரத்தை முடித்து கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பாஜக - திரிணாமுல் ஆகிய கட்சிகளால் பதற்றம் நிலவி வந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

banner

Related Stories

Related Stories