இந்தியா

7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரை பணிகள் மேற்கு வங்க மாநிலத்தை தவிர நாளை மாலையுடன் ஓய்கிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. அதில் 6 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்திருக்கும் நிலையில், 7ம் கட்ட வாக்குப்பதிவு மே 19ம் தேதி நடைபெறுகிறது.

7ம் கட்ட தேர்தல் பீகார் (8), ஜார்கண்ட் (3), மத்திய பிரதேசம் (8), பஞ்சாப் (13), மேற்கு வங்கம் (9), சத்தீஸ்கர் (1), உத்தரபிரதேசம் (13), இமாச்சலப்பிரதேசம் (4) ஆகிய 8 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுவுள்ளது.

இதற்காக, 59 தொகுதிகளிலும் அரசியல் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கான பிரசாரம் இன்று இரவு 10 மணியுடன் நிறைவடைகிறது. ஏனெனில், கொல்கத்தாவில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தையொட்டி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. எஞ்சியுள்ள 50 தொகுதிகளுக்கும் நாளை மாலையுடன் பரப்புரை பணிகள் ஓய்கிறது.

பதற்றம் நிறைந்த, ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதிகளான வாரணாசி, சாகிப், சண்டிகர், பாட்னா, இந்தூர், அமிர்தசரஸ், கோரக்பூர், காசியாப்பூர் ஆகிய பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட உள்ளது. அதே போல், கூடுதல் பாதுகாப்பு படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடைசி கட்டத்தில் பணப்பட்டுவாடா நடத்தப்பட இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளதால், நாளை பிரசாரம் ஓய்ந்ததும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கும் மே 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளதால் நாளையுடன் பரப்புரை பணிகள் ஓயவுள்ளது.

இந்த வாக்குப்பதிவுகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி நடைபெறுகிறது.

banner

Related Stories

Related Stories