இந்தியா

அமித்ஷா பேரணியில் வன்முறை : பா.ஜ.க-வினர் சதியே காரணம் என மார்க்சிஸ்ட் கட்சி பேரணி!

கொல்கத்தாவில் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் வன்முறை சம்பவம் நடந்ததற்கு பா.ஜ.க.வினரின் சதியே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

அமித்ஷா பேரணியில் வன்முறை : பா.ஜ.க-வினர் சதியே காரணம் என மார்க்சிஸ்ட் கட்சி பேரணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களவை தேர்தலின் ஏழாவது கட்ட வாக்குப்பதிவையொட்டி , பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா மேற்கு வங்க மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து மே 14-ம் தேதி பிரமாண்ட சாலைப் பேரணியில் அமித்ஷா பங்கேற்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இதன்படி மாலை 4.30 மணிக்குப் பேரணி தொடங்கியது. பேரணியில் பா.ஜ.க தொண்டர்கள் பங்கேற்றனர். சாலையெங்கும் முழக்கங்களை எழுப்பிய சென்று கொண்டிருந்தனர்.

நடைபெற்ற பேரணி கொல்கத்தா பல்கலைக்கழக வளாகத்தைக் கடந்து சென்றது. அப்போது பல்கலைக்கழக மாணவர்கள் அமித்ஷாவுக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டியதாகக் கூறப்படுகிறது. ‘அமித்ஷா திரும்பிப் போ’ என அவர்கள் கண்டன கோஷமிட்டனர்.

அமித்ஷா பேரணியில் வன்முறை : பா.ஜ.க-வினர் சதியே காரணம் என மார்க்சிஸ்ட் கட்சி பேரணி!

பின்னர் பல்கலைக்கழக வளாகத்தை அமித்ஷா கடந்த சிறிய நேரத்திலேயே பா.ஜ.க தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். காவி உடையணிந்த கும்பல் கல்லூரி நுழைவாயிலை நோக்கி கற்களை எறிந்து தாக்குதல் நடத்தினர். அங்கிருந்து இரு சக்கர வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. நுழைவாயிலை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த மார்பளவு சிலைகள் அடித்து உடைக்கப்பட்டன. இந்த சம்பவம் கொல்கத்தாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வன்முறைக்கு பா.ஜ.கவினரே காரணம் என எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனையடுத்து இந்த வன்முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. மேலும், கட்சியின் மேற்கு வங்காளத்தில் கண்டனப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்கள் சந்தித்தார்.

இதனையடுத்து இந்த வன்முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது. மேலும், மேற்கு வங்காளத்தில் கண்டனப் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் கலந்து கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்தியாளர்கள் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் கூறியதாவது; "அமித்ஷா பேரணியில் வன்முறை வெடித்ததற்கு பாஜகவே பொறுப்பு, இது அவர்களின் திட்டமிட்ட சதிச் செயல். மாணவர்கள் மீதான தாக்குதல் ஏற்றுக் கொள்ளமுடியாத விஷயம். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையை இடித்து கண்டத்துக்குரியது. இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு விரோதமானது. மேலும் இதுகுறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்". என அவர் தெரிவித்தார்.

இந்த பேரணியில் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தலைமை தாங்கினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரட், பீமன் பாசு மற்றும் இடதுசாரி அமைப்பின் சாரிபில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories