இந்தியா

ரம்ஜான் நோன்பு, வெயிலை முன்னிட்டு அதிகாலையில் வாக்குப்பதிவு நடத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி!

நாடாளுமன்றத் தேர்தலுக்காக 7 கட்ட வாக்குப்பதிவுகளில் 6 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்திருக்கிறது. கடைசி கட்ட வாக்குப்பதிவு வருகிற மே19ம் தேதி நடைபெறுகிறது.

ரம்ஜான் நோன்பு, வெயிலை முன்னிட்டு அதிகாலையில் வாக்குப்பதிவு நடத்தக்கோரிய வழக்கு தள்ளுபடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடுமுழுவதும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக, தேர்தல் நாளன்று, காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுவது வழக்கம். முன்னதாக மாதிரி வாக்குப்பதிவுகள் காலை 6 மணி முதல் 7 மணிவரை நடத்தப்படும்.

இந்நிலையில், இஸ்லாமியர்களுக்கான ரம்ஜான் நோன்பு தொடங்கியதை முன்னிட்டும், கத்திரி வெயில் தொடங்கியதை முன்னிட்டும் வாக்குப்பதிவு நேரத்தை அதிகாலை 5.30 மணிக்கு தொடங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நிஜாமுதீன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை காலை அமர்வின் நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சஞ்ஜீவ் கண்ணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அதில் கருத்து தெரிவித்த நீதிபதிகள், வாக்குப்பதிவு நேரத்தை அதிகாலையில் தொடங்கினால், தேர்தல் அலுவலர்கள் வருவதில் சிரமங்கள் ஏற்படும் எனக் கூறி மாலை 6 மணி வரையில் வாக்களிக்க நேரம் இருப்பதால் வெயில் சற்று குறைந்திருக்கும் என குறிப்பிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

banner

Related Stories

Related Stories