ஒடிசாவில் கடந்த 3 ஆம் தேதியன்று ஃபானி புயல் தாக்கியது. பூரி உள்ளிட்ட 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் லட்சக்கணக்கான மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்சாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. புயல் தாக்கி 8 நாட்களாகியும் பல்வேறு இடங்களில் இன்னும் நிலைமை சீராகவில்லை. நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தலைநகர் புவனேஸ்வரத்தில் 50 சதவீத மக்களுக்கு மட்டுமே மின்சாரம் திரும்பக் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மின்சாரம் இல்லாமல் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், மின்சாரம் வழங்கக்கோரி, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்குள்ள மின்விநியோக அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.