இந்தியா

புத்த பூர்ணிமாவை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்? - உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புத்த பூர்ணிமாவை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்? - உளவுத்துறை எச்சரிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

புத்த மதத்தை தோற்றுவித்த கெளதம புத்தரின் பிறந்தநாளை புத்த பூர்ணிமா என்ற பெயரில் பெளத்தர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அவ்வகையில், இந்த மாதம் நடைபெற இருக்கும் புத்த பூர்ணிமா அன்று ஐ.எஸ் அல்லது ஜமாத்உல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புத்த பூர்ணிமா விழா வடமாநிலங்களில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் என்பதால் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மேலும், எச்சரிக்கையை அடுத்து, இந்து மற்றும் புத்த வழிபாடு தலங்களிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதேப்போன்ற தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்த உள்ளதாக இலங்கைக்கு உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும் அதனை அலட்சியப்படுத்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகளை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories