மாநில தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். ஓட்டு எண்ணும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை தலைமை தேர்தல் ஆணையர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர், இதுவரை 5 கட்ட மக்களவைத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. மீதமுள்ள 2 கட்டத் தேர்தல்கள் மீதி உள்ள நிலையில் தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் வகையில் இந்தியா கணக்கில் வராத இதுவரை 3,399.33 கோடி ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதில் தமிழகத்தில் 949.03 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு முதலிடத்தில் உள்ளது. டெல்லியில் 420.94 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முடியும் வரை பறக்கும் படைகளின் சோதனைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.