இந்தியா

“மோடி ஆட்சியில் பொருளாதாரம் தரைமட்டத்துக்குப் போய்விட்டது” : சீதாராம் யெச்சூரி விளாசல்!

மோடி ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் தரைமட்டத்துக்குப் போய்விட்டது எனக் குற்றம்சாட்டியுள்ளார் சீதாராம் யெச்சூரி.

“மோடி ஆட்சியில் பொருளாதாரம் தரைமட்டத்துக்குப் போய்விட்டது” : சீதாராம் யெச்சூரி விளாசல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மோடி ஆட்சியில் இந்திய நாட்டின் பொருளாதாரம் தரைமட்டத்துக்குப் போய்விட்டது எனக் குற்றம்சாட்டியுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சீதாராம் யெச்சூரி, “பிரதமர் மோடி தலைமையிலான அரசில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருக்கின்றன. புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது.

மோடி ஆட்சியில் பெரும் முதலாளிகளின் நலனுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. மோடி ஆட்சியில் பணக்காரர்களின் ரூ.5.50 லட்சம் கோடி வங்கிக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் பொருளாதாரத்தை தரைமட்டத்துக்குக் கொண்டுசென்றுவிட்டது பா.ஜ.க அரசு. பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்தால் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்படும் எனச் சொன்னது பா.ஜ.க. ஆனால், ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள் 176% அதிகரித்துள்ளன.” என அவர் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories