இந்தியா

“மோடியை வீட்டுக்கு அனுப்புவதில் தென்னிந்தியா முக்கியப் பங்காற்றும்” : சசி தரூர்

பா.ஜ.க-வை தோற்கடித்து மோடியை வீட்டுக்கு அனுப்புவதில் தென்னிந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

“மோடியை வீட்டுக்கு அனுப்புவதில் தென்னிந்தியா முக்கியப் பங்காற்றும்” : சசி தரூர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் இன்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர், “மோடி அரசு, தென் மாநிலங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது. பா.ஜ.க-வை தோற்கடித்து மோடியை வீட்டுக்கு அனுப்புவதில் தென்னிந்தியா முக்கியப் பங்கு வகிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க-வின் கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் கூட்டாட்சி முறை மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோடி அரசு தென்னிந்தியாவை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தியது. எனவே, இந்த ஆட்சியை அகற்றுவதில் தென்மாநிலங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்.

மாட்டிறைச்சி விற்பனை செய்யவும், உண்ணவும் தடை விதித்தும், இந்தி மொழியை மாநிலங்கள் மீது திணித்தும் மக்களை அச்சுறுத்தியது பா.ஜ.க அரசு. மேலும் பொருளாதார ரீதியான சறுக்கலையும் சந்திக்கச் செய்தது.

காங்கிரஸ் கட்சி அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து தரப்புக்கும் சம முக்கியத்துவம் தர நினைக்கிறது. அதனால் தான், கேரள மாநிலம் வயநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். காங்கிரஸ் ஆட்சியில் தென் மாநிலங்களின் பிரச்சனைகளும் கோரிக்கைகளும் புறக்கணிக்கப்படாது என்பதை இது உணர்த்துகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories