இந்தியா

தூக்கம் இல்லாமல் தவிப்பதால் மோடிக்கு மனநிலை பாதிப்பு - சத்தீஸ்கர் முதல்வர் 

ராஜீவ் காந்தி குறித்த மோடியின் விமர்சனத்துக்கு சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் பதிலடி கொடுத்துள்ளார்.

தூக்கம் இல்லாமல் தவிப்பதால் மோடிக்கு மனநிலை பாதிப்பு - சத்தீஸ்கர் முதல்வர் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தூக்கமின்மை காரணமாக பிரதமர் மோடியின் மனநிலை சீராக இல்லாததால் அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 5) அன்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நம்பர் ஒன் ஊழல்வாதி என்றும், அவர் காங்கிரஸாரால் மிஸ்டர் க்ளீன் என சித்தரிக்கப்பட்டவர் என்றும் விமர்த்திருந்தார்.

மோடியின் இந்தப் பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இது குறித்து பேசிய சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல், நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியை சந்திக்கும் என்பதை அறிந்து, மன அமைதியின்றி இருக்கிறார் மோடி.

அதனால், பல ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த ராஜீவ் காந்தி பற்றி, அதுவும் தேர்தல் சமயத்தில் மோடி பேசி இருக்கிறார்.

மேலும், நாள்தோறும் தான் 3 அல்லது 4 மணிநேரம் மட்டுமே தூங்குவதாக மோடி கூறியிருந்தார். எனவே, தூக்கமின்மை காரணமாக அவரது மனநிலை தடுமாறியுள்ளது. மோடிக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அவசியம் தேவைப்படுகிறது என பதிலடி கொடுத்துள்ளார் பூபேஷ் பாகேல்.

banner

Related Stories

Related Stories