மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. 7 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் 6 மணி நிலவரப்படி சராசரியாக 60.80% வாக்குகள் பதிவாகியுள்ளன.
உத்தரபிரதேசத்தில் 14, ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசத்தில் 7, மேற்கு வங்கத்தில் 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 தொகுதிகள் என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
உத்தர பிரதேச மாநிலத்தில் சோனியா காந்தி போட்டியிட்ட ரேபரேலி, ராகுல் போட்டியிட்ட அமேதி, ராஜ்நாத்சிங் போட்டியிட்ட லக்னோ ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு எதிர்பார்த்ததை விட அதிகமாக காணப்பட்டது.
மேற்குவங்க மாநிலத்தில் பல ஓட்டுச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு மாற்று எந்திரங்கள் வந்தபிறகு தாமதமாகவே வாக்குப்பதிவு தொடங்கியது.
6 மணி நிலவரப்படி தோராயமான வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி, மாநிலங்கள் வாரியாக வாக்குப்பதிவு சதவீதம் பின்வருமாறு :
பீகார் - 56.79%
ஜம்மு காஷ்மீர் - 17.07%
மத்திய பிரதேசம் - 62.96%
ராஜஸ்தான் - 63.03%
உத்தர பிரதேசம் - 53.32%
மேற்கு வங்கம் - 74.06%
ஜார்க்கண்ட் - 63.99%