இந்தியா

விதிகளை மீறிச் செயல்பட்டாலும் மோடியை எதுவும் கேட்காத தேர்தல் ஆணையம்: யெச்சூரி கண்டனம்

தேர்தல் நடத்தை விதிகளை மீறிச் செயல்பட்டாலும் மோடியை மட்டும் எதுவும் கேட்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் நினைக்கிறதா? என்று சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கண்டித்துள்ளார்.

விதிகளை மீறிச் செயல்பட்டாலும் மோடியை எதுவும் கேட்காத தேர்தல் ஆணையம்: யெச்சூரி கண்டனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மகாராஷ்ட்ரா மாநிலம் வார்தாவில் கடந்த மாதம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, வயநாட்டில் சிறுபான்மையினர் அதிகமாக வசிப்பதால்தான் ராகுல் காந்தி அந்த தொகுதியில் போட்டியிடுவதாக கூறினார்.

இது தேர்தல் நடத்தை விதிமீறல் எனக்கூறி காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். ஆனால் பிரதமர் மோடியின் இந்த உரையில் தேர்தல் நடத்தை விதிமீறல் இல்லை என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டங்களை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நாடு முழுதும் பிரதமர் நரேந்திர மோடி எப்படியெல்லாம் தேர்தல்நடத்தை விதிகளை மீறிப் பேசிவருகிறார் என்பது பகிரங்கமாகி வெளியாகி வருகிறது. தன்னுடைய தேர்தல் பிரச்சார உரையைத் தயாரிப்பதற்காக, அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு வசதிகளையெல்லாம் பயன்படுத்தி, பல்வேறு அமைச்சகங்கள், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகங்களிடமிருந்து மோடி தகவல்களையெல்லாம் பெறுகிறார்.

தேர்தல் நடத்தை விதி மீறல்களைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் பிரதமர் குறித்து கடந்த காலங்களில் நாங்கள் எழுப்பிய கேள்விகளையே மீண்டும் கேட்க விரும்புகிறோம். தேர்தல் நடத்தை விதிகளை மீறி செயல்படும் பிரதமர் தேர்தல் ஆணையம் எதுவுமே கேட்காததன் காரணமாக, மேலும் மேலும் ஊக்கம் பெற்று தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறிக் கொண்டிருக்கிறார்.

வாரணாசி தொகுதியில் வேட்பாளராக இருக்கும் நபர், ஒரு பிரதமராகவும் இருப்பதால் அவர் தேர்தல் நடத்தை விதிகளை மீறிச் செயல்பட்டாலும் அவரை மட்டும் எதுவும் கேட்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் நினைக்கிறதா? இதர வேட்பாளர்களை விட நரேந்திர மோடி மட்டும் சிறப்பு தகுதி வாய்ந்தவர் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறதா? வார்தாவில் மோடி பேசிய பேச்சு கடும் கண்டனத்திற்குரியது. ஆனால் அதில் தவறேதும் இல்லை என்று தேர்தல் ஆணையம் நினைக்கிறதா? இப்பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து புகார் கூறி வருகிறோம். எனினும் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ள மறுத்து வருகிறது” என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories