பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேச மாநிலத்தில், பொதுத்தேர்வில் மாணவர்கள் மிகக்குறைவான தேர்ச்சி அடைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் நடைபெற்று பொதுத்தேர்வில் முடிவுகள் வெளிவந்துள்ளது. அதில் இந்தாண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. குறிப்பாக 165 பள்ளிகளில் எந்தவொரு மாணவ - மாணவியரும் தேர்ச்சி அடையவில்லை.
அதுமட்டுமின்றி 139 உயர்நிலைப் பள்ளிகளிலும், 249 இடைநிலைப் பள்ளிகளில் 20 சதவீதத்திற்குக் குறைவான மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் குறைவான தேர்ச்சி குறித்து கல்வியாளர் ஒருவர் கூறுகையில்; “அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததே இதற்குக் காரணம். அதுமட்டுமின்றி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்புவதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதற்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
பொறுப்புணர்வு இல்லாமை மற்றொரு காரணம். பல பள்ளிகளில் உள்கட்டமைப்பு மிகவும் மோசமாகச் சூழலில் தான் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.