திரிபுரா மாநில பாஜக முதல்வர் பிப்லவ் குமார் தேப். உளறல்களுக்குப் பெயர் போனவர். முதல்வராகி பேசிய கன்னிப்பேச்சிலேயே, “மகாபாரத காலத்தில் சேட்டிலைட், இண்டர்நெட் வசதிகள் இருந்தது” என்று கூறி அதிர்ச்சி அளித்தவர்.
“ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தது சரி, ஆனால், டயானா ஹெய்டனுக்கு எதற்காக உலக அழகிப்பட்டம் கொடுத்தார்கள்?” என்று ஆதங்கப்பட்டதாகட்டும், “சிவில் இஞ்சினியரிங் படித்தவர்கள் மட்டுமே சிவில் சர்வீஸ் தேர்வு எழுத வேண்டும்” என்று கூறியதாகட்டும்; “வேலையில்லாத இளைஞர்கள் பீடா கடை வைக்க வேண்டும்” என்று இலவச ஆலோசனை வழங்கியதாகட்டும்- குறுகிய காலத்திலேயே மிகவும் பிரபலமானவர் பிப்லவ் குமார் தேப்.
“குளத்தில் வாத்துகள் நீந்துவதால் தண்ணீரிலுள்ள ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கும், தண்ணீர் சுத்தமாகும்” என்று பிப்லவ் தேப் கூறியது பற்றி இப்போது வரை விஞ்ஞானிகள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதுஒருபுறமிருக்க, பிப்லவ் தேப் குமாரிடமிருந்து விவகாரத்து வழங்குமாறு, அவரின் மனைவி நிதி, தில்லி தீஸ்ஹசாரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிப்லவ் தேப் குமார் தன்னை மிகக்கொடூரமாக அடித்துத் துன்புறுத்துவதாகவும் அந்த மனுவில் நிதி குற்றம் சாட்டியுள்ளார்.