இந்தியா

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் : இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி!

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் திவ்யான்ஷ் சிங் பன்வார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Divyansh Singh Panwar
Divyansh Singh Panwar
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் ஆண்கள் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீரர் திவ்யான்ஷ் சிங் பன்வார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பைனலில் திவ்யான்ஷ் சிங் பன்வார் 249 புள்ளிகள் குவித்து 2-வது இடம் பிடித்தார். வெறும் 0.4 புள்ளிகளில் தங்கப்பதக்கத்தை இழந்துள்ளார் திவ்யான்ஷ்.

வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலமாக திவ்யான்ஷ், டோக்கியோவில் 2020-ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கி சுடுதலில் தகுதி பெறும் 4-வது இந்தியர் திவ்யான்ஷ் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

பெய்ஜிங் உலகக்கோப்பை போட்டியில் துப்பாக்கி சுடுதலில் மொத்தம் 3 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. ஏற்கெனவே, கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் திவ்யான்ஷ் சிங் - அஞ்சும் மவுத்கில் ஜோடியும், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மனுபாகர் - சவுரப் சௌத்ரி கோடியும் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories