தென் மாநிலங்களில் வெடிகுண்டு வைத்து தகர்க்க தீவிரவாதிகள் சதி என நேற்று பெங்களூரு நகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு சுவாமி சுந்தரமூர்த்தி என்பவர் தொலைபேசி மூலம் நேற்று மாலை தகவல் தெரிவித்திருந்தார்.
மேலும், 19 தீவிரவாதிகள் ராமநாதபுரத்தில் பதுங்கி இருப்பதாகவும் ஓடும் ரயில்கள் மற்றும் பல்வேறு முக்கிய இடங்களில் தமிழகத்தில் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பெங்களூரு காவல்துறை சார்பில் கர்நாடக போலீஸ் டிஜிபி-க்கு தகவல் அளிக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், தொலைபேசியில் தொடர்பு கொண்ட நபரைத் தேட கர்நாடக காவல்துறை சார்பில் சிறப்புப்படை அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று பெங்களூர் புறநகர் பகுதியான ஆவளஹள்ளி பகுதியைச் சேர்ந்த 65 வயது மதிக்கத்தக்க சுவாமி சுந்தரமூர்த்தி என்பவவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர் முன்னாள் ராணுவ வீரர் என்பதும் அவர் இதுபோன்ற திட்டமிட்ட தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்தக்கூடும் என்ற ஒரு யூகத்தின் அடிப்படையில் போலீசாருக்கு தகவல் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வதந்தி பரப்பிய ஓட்டுநர் சுவாமி சுந்தரமூர்த்தியை கைது செய்த போலீஸார் அவரிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.