இந்தியா

நான்காம் கட்ட வாக்குப்பதிவு - இன்று மாலை ஓய்கிறது பிரசாரம்!

நான்காம் கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கும் 71 மக்களவைத் தொகுதிகளுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது.

Polling booth
Polling booth
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி, மே 6-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை மூன்று கட்டங்களாக, மொத்தம் 303 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில், நான்காம் கட்டத் தேர்தல் வரும் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது.

மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட், ஜம்மு- காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 29-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

நான்காம் கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கும் தொகுதிகளுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இதனால், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், வேட்பாளர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

71 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் 945 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 12 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் வாக்குகளைப் பதிவு செய்யவுள்ளனர்.

வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் தகுந்த ஏற்பாடுகளை செய்துள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories