லோக்பால் அமைப்பிற்கான தற்காலிக அலுவலகம் டெல்லியில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், உயர் பதவியில் இருப்பவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ‘லோக்பால்’ அமைப்பின் முதல் தலைவராக, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஷ் நியமிக்கப்பட்டார்.
பிரதமர் மோடி தலைமையில் அமைக்கப்பட்ட தேர்வுக்குழுவின் பரிந்துரையின்படி, பினாகி சந்திர கோஷ் தலைமையில் எட்டு உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்த நிலையில், அவர்கள் அனைவரும் கடந்த மார்ச் 27-ம் தேதி பதவியேற்றுக்கொண்டனர்.
லோக்பால் அமைப்புக்கென தனியாக அலுவலகம் இல்லாமல் இருந்தநிலையில், டெல்லி சாணக்யாபுரி பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர சொகுசு ஹோட்டலில் தற்காலிகமாக அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
இந்த ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்தில் லோக்பால் அமைப்பில் உள்ள எட்டு உறுப்பினர்களுக்கும் போதிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.