இஸ்லாமிய மத உணர்வுகளை புண்படுத்தி, மதப் பிரிவினையை தூண்டும் வகையில் பிரசாரம் செய்ததாக உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரித்த தேர்தல் ஆணையம், அவருக்கும் 3 நாட்கள் பிரசாரம் செய்ய தடை விதித்து.
ஆளுங்கட்சியினர் செய்யும் தேர்தல் விதிமீறல்கள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு நிலவி வந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதே போல் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கு 2 நாட்கள் பிரசாரம் செய்ய தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம்.
தேர்தல் விதிமுறைகளை மீறுவோர் மீது தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று காலை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு வெளியான சில மணி நேரங்களிலேயே இந்த நடவடிக்கை எடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.