கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 6 ஆம் தேதி, ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆளும் இடதுசாரி ஜனநாயக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனை போட்டி நடைபெறுகிறது.
140 தொகுதிகளைக் கொண்ட இம்மாநிலத்தில் ஆட்சியமைக்க, 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே இடது முன்னணி தான் முன்னிலை வகித்து வருகிறது.
காலை 11 மணி நிலவரப்படி இடது முன்னணி 93 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 45 தொகுதிகளிலும், பா.ஜ.க 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. இதனால் கேரளாவில் மீண்டும் இடது முன்னணி ஆட்சி ஏற்படும் என்பது உறுதியாகி விட்டது. இதன் மூலம் கேரளாவில் தொடர்ந்து ஆட்சியில் ஏறும் முதல் கட்சி என்ற பெருமை சிபிஎம் தலைமையிலான இடது முன்னணிக்கு கிடைத்துள்ளது.