சிபிஐ வேட்பாளர் மாரிமுத்து வெற்றி!
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் திமுக கூட்டணியின் சிபிஐ கட்சி வேட்பாளர் மாரிமுத்து தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சுரேஷ் குமாரை விட 29 ஆயிரத்து 102 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் ஈஸ்வரன் வெற்றி!
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் 2,872 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
ஆத்தூர் தொகுதியில் திமுக அமோக வெற்றி!
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 1,34,082 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்
2 முறையாக வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் திமுக வேட்பாளர் ஐ.பி.செந்தில் குமார் 29.561 வாக்குகள் அதிகம் பெற்று 2வது முறையாக வெற்றி பெற்றார்
திமுக வேட்பாளர் மனோதங்கராஜ் வெற்றி !
பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில், திமுக வேட்பாளர் மனோதங்கராஜ் 36,773 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் ஸ்டாலின்குமார் வெற்றி !
திருச்சி மாவட்டம் துறையூரில் திமுக வேட்பாளர் ஸ்டாலின்குமார் 22,071 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் வெற்றி !
திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்ற தொகுதியில், திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன் 26,836 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சௌந்தரபாண்டியன் 16,949 வாக்குகள் பெற்று 4-வது முறையாக வெற்றி பெற்றுகிறார்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் தங்கபாண்டியன் 3698 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதியிலும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வெற்றி பெற்றது.
ராதாபுரம் தொகுதி திமுக வேட்பாளர் அப்பாவு 5500 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.
வாசுதேவநல்லூர் மதிமுக வேட்பாளர் சதன் திருமலைக்குமார் 2298 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி (தனி) தொகுதி திமுக வேட்பாளர் பன்னீர்செல்வம் 11,153 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி.
பாபநாசம் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் மனிதநேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லா 16145 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி..
தஞ்சை, திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய 7 தொகுதிகளில் தி.மு.க வெற்றி.
மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜகுமார் 2742 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மதியழகன் 12614 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை திமுக வேட்பாளர் மணிகண்ணன் 108960 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் திமுக வேட்பாளர் உதயசூரியன் 44071வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
தூத்துக்குடி தொகுதியில் 50157 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் வெற்றி.
கம்பம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் 42,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
மதுரை கிழக்கு தொகுதி திமுக வேட்பாளர் மூர்த்தி 47,871 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி !
பட்டுக்கோட்டை திமுக வேட்பாளர் க.அண்ணாதுரை 25221 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
திமுக வேட்பாளர் மதியழகன் 12614 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி .
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் 39034 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் 50,278 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சாத்தூர் தொகுதி திமுக கூட்டணி மதிமுக வேட்பாளர் ரகுராமன் 10,023 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் ஆளூர் ஷாநவாஸ் 7,238 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் 51 ஆயிரத்து 174 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
கீழ்ப்பெண்ணாத்தூர், பாளையங்கோட்டை, பரமக்குடி தொகுதிகளின் வெற்றி நிலவரம்!
பரமக்குடி (தனி) தொகுதி தி.மு.க வேட்பாளர் செ.முருகேசன் 12,528 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
திருவாடானை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கருமாணிக்கம் 12,830 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
மதுரை மத்திய தொகுதி தி.மு.க வேட்பாளர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
கன்னியாகுமரி தொகுதி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி.
கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ்குமார் 45,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
திருப்பத்தூர் தொகுதி சுற்று எண்ணிக்கை : 12
தி.மு.க வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன் - 42813
அ.தி.மு.க வேட்பாளர் மருது அழகுராஜ் - 25478
17335 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை.
திருச்சி திருவெறும்பூர் தொகுதி சுற்று எண்ணிக்கை : 17
தி.மு.க வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - 59266
அ.தி.மு.க வேட்பாளர் பா.குமார் - 29579
29687 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை.
திருவண்ணாமலை தொகுதியில் திமுக வேட்பாளர் எ.வ.வேலு 80161 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி 18வது சுற்று முடிவில், திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி 81625 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
விளாத்திகுளம் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் வெற்றி!
அதிமுக வேட்பாளர் சின்னப்பனை விட 37893 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் மார்க்கண்டேயன் வெற்றி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியின் 2021 சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் 23 சுற்றுகளின் மொத்த நிலவரப்படி,
தி.மு.க வேட்பாளர் மார்கண்டேயன் - 32,224
அ.தி.மு.க வேட்பாளர் சின்னப்பன் - 51237
அதிமுக வேட்பாளர் சின்னப்பனை விட 37893 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் வெற்றி
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி தி.முக வேட்பாளர் முத்துராஜா 1223 வாக்குகள் முன்னிலை.
திருமயம் திமுக வேட்பாளர் ரகுபதி 1121 வாக்குகள் பெற்று முன்னிலை.
ஆலங்குடி திமுக வேட்பாளர் மெய்யநாதன் 14988 அதிகம் பெற்று முன்னிலை .
கந்தர்வகோட்டை சிபிஎம் வேட்பாளர் சின்னதுரை 9000 அதிகம் பெற்று முன்னிலை.
அறந்தாங்கி காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரன் 8700 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை.
பெரியகுளம் தொகுதி சுற்று எண்ணிக்கை : 9
தி.மு.க வேட்பாளர் சரவணக்குமார் - 32,224
அ.தி.மு.க வேட்பாளர் முருகன் - 22,132
10,092 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை.
திருவாரூர் தொகுதி சுற்று எண்ணிக்கை : 6
தி.மு.க வேட்பாளர் பூண்டி கலைவாணன் - 3302
அ.தி.மு.க வேட்பாளர் பன்னீர்செல்வம் - 1664
19322 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை.
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் வேட்பாளர் நாகை மாலி 16,534 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க கூட்டணியின் பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
மதுரை மத்திய தொகுதி சுற்று எண்ணிக்கை : 6
தி.மு.க வேட்பாளர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் - 3235
அ.தி.மு.க வேட்பாளர் ஜோதிமுத்துராமலிங்கம் - 1736
7578 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை.
திருச்சியில் 8 தொகுதிகளில் தி.மு.க முன்னிலை!
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க 8 தொகுதிகளில் முன்னிலை !
கன்னியாகுமரி தொகுதி சுற்று எண்ணிக்கை : 8
தி.மு.க வேட்பாளர் ஆஸ்டின் - 27392
அ.தி.மு.க வேட்பாளர் தளவாய்சுந்தரம் - 29547
2155 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை.
தூத்துக்குடி தொகுதி சுற்று எண்ணிக்கை : 11
தி.மு.க வேட்பாளர் கீதாஜீவன் - 31,501
அ.தி.மு.க வேட்பாளர் விஜயசிலன் - 16,222
15279 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை.
ராதாபுரம் தொகுதி சுற்று எண்ணிக்கை : 10
தி.மு.க வேட்பாளர் அப்பாவு - 31,573
அ.தி.மு.க வேட்பாளர் ஐ.எஸ்.இன்பதுரை - 25,420
6,153 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை.
11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஹெச்.ராஜா பின்னடைவு!
காரைக்குடி 10 வது சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 27,208 வாக்குகளும், பா.ஜ.க வேட்பாளர் ஹெச். ராஜா 15,780 வாக்குகள் பெற்றுள்ளனர். 11,428 வாக்குகள் வித்தியாசத்தில் ஹெச் ராஜா பின்னடைவை சந்தித்துள்ளார்.
ராமநாதபுரம் தொகுதி சுற்று எண்ணிக்கை : 8
தி.மு.க வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் - 38,418
பா.ஜ.க வேட்பாளர் குப்புராம் - 21,888
16,530 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை.
மதுரை மத்திய தொகுதி சுற்று எண்ணிக்கை : 8
தி.மு.க வேட்பாளர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் - 21611
அ.தி.மு.க வேட்பாளர் ஜோதிமுத்துராமலிங்கம் - 14547
7064 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை.
கன்னியாகுமரி தொகுதி இடைதேர்தல் சுற்று : 5
காங்கிரஸ் விஜய்வசந்த்.1,16,742
பா.ஜ.க இராதகிருஷ்ணன் 73,477
கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் 43,265 வாக்கு வித்தியாசத்தில் விஜய் வசந்த் முன்னிலையில் உள்ளார்.
சேலம் வடக்கு தொகுதி சுற்று எண்ணிக்கை : 8
தி.மு.க வேட்பாளர் ராஜேந்திரன் - 29708
அ.தி.மு.க வேட்பாளர் வெங்கடாசலமம் - 24411
5297 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை.
சங்கராபுரம் தொகுதி சுற்று எண்ணிக்கை : 8
தி.மு.க வேட்பாளர் உதய சூரியன் - 36952
பா.ம.க வேட்பாளர் ராஜா - 22771
14181 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை.
நாமக்கல் சட்டமன்ற தொகுதி!
6-வது சுற்றில், அ.தி.மு.க வேட்பாளர் பாஸ்கரை விட, தி.மு.க வேட்பாளர் ராமலிங்கம் 7,018 வாக்குகள் அதிகம் பெற்று முன்னணியில் இருந்து வருகிறார்.
திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் 10வது மேஜையில் வைக்கப்பட்டிருந்த வாக்கு பதிவு இயந்திரத்தில் எண் மாறி இருந்ததால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்.
தூத்துக்குடி தொகுதி சுற்று எண்ணிக்கை : 4
தி.மு.க வேட்பாளர் கீதாஜீவன் - 11286
அதிமுக வேட்பாளர் விஜயசிலன் 5241
6045 வாக்கு வித்தியாசம் தி.மு.க முன்னிலை.
தளி தொகுதி சுற்று எண்ணிக்கை : 4
சிபிஐ வேட்பாளர் T.ராமசந்திரன் - 20376
பா.ஜ.க வேட்பாளர் - 10970
9406 வாக்கு வித்தியாசம் தி.மு.க கூட்டணி முன்னிலை.
உளுந்தூர்பேட்டை தொகுதி சுற்று எண்ணிக்கை : 7
தி.மு.க வேட்பாளர் மணிகண்ணன் - 26,422
அ.தி.முக வேட்பாளர் குமரகுரு - 25,429
993 வாக்கு வித்தியாசம் தி.மு.க முன்னிலை.
திருவெறும்பூர் தொகுதி சுற்று எண்ணிக்கை : 4
தி.மு.க வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - 14,071
அ.தி.முக வேட்பாளர் பா. குமார் 8,775
5,296 வாக்கு வித்தியாசம் தி.மு.க முன்னிலை.
திருச்சி கிழக்கு தொகுதி சுற்று எண்ணிக்கை : 4
தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜ் - 12952
அ.தி.மு.க வேட்பாளர் வெல்லமண்டி நடராஜன் - 7879
4515 வாக்கு வித்தியாசம் தி.மு.க முன்னிலை.
கீழ்வேளூர் தொகுதி சுற்று எண்ணிக்கை : 7
சி.பி.ஐ(எம்) வேட்பாளர் நாகை மாலி - 24,358
பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணன் - 19,654
4,704 வாக்கு வித்தியாசம் தி.மு.க கூட்டணி முன்னிலை.
மதுரை தெற்கு தொகுதி சுற்று எண்ணிக்கை : 3
மதிமுக வேட்பாளர் பூமிநாதன் - 10,266
அதிமுக வேட்பாளர் சரவணன் - 5,962
4,344 வாக்கு வித்தியாசம் தி.மு.க கூட்டணி முன்னிலை.
ராமநாதபுரம் தொகுதி சுற்று எண்ணிக்கை : 4
தி.மு.க வேட்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் - 15,366
பா.ஜ.க வேட்பாளர் குப்புராம் - 7103
8,263 வாக்கு வித்தியாசம் தி.மு.க முன்னிலை.
மதுரை வடக்கு தொகுதி சுற்று எண்ணிக்கை : 3
தி.மு.க வேட்பாளர் கோ. தளபதி - 8354
பா.ஜ.க வேட்பாளர் டாக்டர் சரவணன் - 7185
1169 வாக்கு வித்தியாசம் தி.மு.க முன்னிலை.
நன்னிலம் தொகுதியில் தி.மு.க முன்னிலை!
நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சுற்று எண்ணிக்கை : 3
திமுக வேட்பாளர் ஜோதி ராமன் - 3615
அதிமுக வேட்பாளர் காமராஜ் - 3317
1146 வாக்கு வித்தியாசம் தி.மு.க முன்னிலை.
தி.மு.க கூட்டணி வேட்பாளர் பொன்னுத்தாய் - 2505
அ.தி.மு.க வேட்பாளர் ராஜன் செல்லப்பா - 2505
444 வாக்கு வித்தியாசம் தி.மு.க கூட்டணி முன்னிலை.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தொகுதி 4-வது சுற்று
தி.மு.க - 14265,
அ.தி.மு.க - 8788,
5477 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் முன்னிலை..
மானாமதுரை (தனி) சட்டமன்ற தொகுதி சுற்று எண் -1
தி.மு.க வேட்பாளர் தமிழரசி ரவிகுமார் - 2819
அ.தி.மு.க வேட்பாளர் நாகராஜன் - 2470
349 வாக்கு வித்தியாசம் தி.மு.க முன்னிலை..
நாகப்பட்டினம் தொகுதியில், அ.தி.மு.க வேட்பாளர் தங்க.கதிரவனைவிட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ஆளூர் ஷானவாஸ் 398 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை.
ராஜபாளையம் தொகுதியில், அ.தி.மு.க வேட்பாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியை விட 1909 வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க வேட்பாளர் தங்கபாண்டியன் முன்னிலை.
கரூர் அரவக்குறிச்சி தொகுதி முதல் சுற்று!
தி.மு.க வேட்பாளர் இளங்கோ - 3117
பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை - 2517
600 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை.
ஒட்டப்பிடாரம்
தி.மு.க சண்முகையா - 3413
அ.தி.மு.க மோகன் - 2136
தி.மு.க முன்னிலை.
திருச்சி கிழக்கு முதல் சுற்று
தி.மு.க இனிகோ இருதயராஜ் - 833
அ.தி.மு.க வெல்லமண்டி நடராஜன் - 365
468 வாக்கு வித்தியாசம் தி.மு.க முன்னிலை..
திருச்சி மேற்கு தொகுதி முதல் சுற்று
தி.மு.க கே.என்.நேரு - 4350
அ.தி.மு.க பத்மநாதன் 1550.
2800 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை.
மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி முதல் சுற்று
கதிரவன் தி.மு.க 5678
அ.தி.மு.க பரஞ்சோதி 2384
2844 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை.
துறையூர் சட்டமன்ற தொகுதி முதல் சுற்று
தி.மு.க துறையூர் ஸ்டாலின் குமார் - 3680
அ.தி.மு.க இந்திரா காந்தி -3131.
549 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க முன்னிலை.
விராலிமலை தொகுதி திமுக வேட்பாளர் பழனியப்பன் முன்னிலை உள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.
தபால் வாக்குகள் எண்ணியதில் 14 தொகுதிகளிலும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்கள் முன்னணியில் உள்ளனர்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தபால் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.
தமிழகத்தில் சென்னை ஆயிரம் விளக்கு உள்ளிட்ட சில தொகுதிகளில் தபால் வாக்கு எண்ணும் பணியில் தாமதம்!
நாடே எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது.
இந்த தேர்தலில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.
இந்நிலையில் தேர்தலுக்கு முன்னதாக கடந்த கருத்துக்கணிப்பிலும், பிந்தைய கருத்துக்கணிப்பிலும் தி.மு.க கூட்டணியே வெற்றி பெறும் என தெரிவித்துள்ளன. இந்த சூழலில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.