திமுக அரசு

160 - 170 இடங்களில் தி.மு.க வெல்லும் : தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தகவல்! #ExitPolls

ஏபிபி - சி வோட்டர் கருத்துக் கணிப்பின்படி, தி.மு.க கூட்டணி 166 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அ.தி.மு.க கூட்டணி 64 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

160 - 170 இடங்களில் தி.மு.க வெல்லும் : தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தகவல்! #ExitPolls
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி முடிவடைந்த நிலையில், மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.

பல்வேறு நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஏபிபி - சி வோட்டர் கருத்துக் கணிப்பின்படி, தி.மு.க கூட்டணி 166 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அ.தி.மு.க கூட்டணி 64 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மேலும், தி.மு.க கூட்டணி 46.7% வாக்குகளைக் கைப்பற்றும் எனவும், அ.தி.மு.க கூட்டணி 35% வாக்குகளைக் கைப்பற்றும் என்றும் ஏபிபி - சி வோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, ரிபப்ளிக் CNX தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, தி.மு.க கூட்டணி 160 முதல் 170 இடங்கள் வரை வெற்றி பெறும் என்றும், அ.தி.மு.க கூட்டணி 58 முதல் 68 இடங்களில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்கணிப்புகள் தாண்டி, பத்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சிக்கு எதிராக மக்களிடையே வெகுவான அதிருப்தி நிலவுவதாலும், கட்சியையும் ஆட்சியையும் பா.ஜ.க-விடம் அடகு வைத்துச் செயல்படுவதாலும் அ.தி.மு.க படுதோல்வியடைந்து, தி.மு.க 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories