திமுக அரசு

திமுக வெற்றியை ஜீரணிக்க முடியாத அரைகுறை கருத்துக்கணிப்புகளை வெளுத்து வாங்கிய எழுத்தாளர் !

தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் அதனை பொறுத்துக்கொள்ளாமல் விமர்சித்துள்ள குழுவுக்கு எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி சரமாரியாக சாடியுள்ளார்.

திமுக வெற்றியை ஜீரணிக்க முடியாத அரைகுறை கருத்துக்கணிப்புகளை வெளுத்து வாங்கிய எழுத்தாளர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"இரண்டு மாதங்களாக எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு. ஒவ்வொரு தொகுதியிலும் 2000 முதல் 3000 பேரிடம் கேள்வி கேட்டு அதன் மூலம் வெளியிடப்படுகிறது" என்கிறது வெண்பா கீதாயன் குழு.

இரண்டு மாதங்கள் = 60 நாட்கள்

2000-3000 Avg = 2500 வாக்காளர்கள்

மொத்தமுள்ள தொகுதிகள் = 234

தொகுதிக்கு 2500 பேர் எனில் குறைந்தது (234x 2500) 5,85,000பேரைச் சந்திக்க வேண்டும். ஒரு நாளைக்குச் சராசரியாக (5,85,000÷60) 9750 வாக்காளர்களை வெவ்வேறு பகுதியில் அணுக வேண்டும்.

ஒரு முழுநாளில் 8 முதல் 12 மணி நேரம் கருத்துக்கணிப்பு நடத்தினாலும் ஒரு மணி நேரத்துக்கு 800+ வாக்காளர்களைக் கையாள வேண்டும். நிமிடத்திற்கு 13பேர்.

ஒரு நிறுவனம் இத்தனை பேரைக் கையாள்வதற்கு தகுதியான பயிற்சி பெற்ற குழு, அரசியல் புரிதல், செயல்முறைப் பயிற்சி, மக்களைத் திரட்டுவதற்கான வழிமுறைகள், பயணத் திட்டமிடல், உள்ளூர் தொடர்பு நெட்வொர்க் ஆகியவை அத்யாவசியம்.

பிறகு, பதில்களை ஒருங்கிணைத்து அவற்றைத் தொகுதிவாரியாகப் புள்ளிவிபரங்களாக மாற்றுவது இன்னும் கவனமாக பிசகில்லாமல் செய்யவேண்டிய வேலை.

ஆனால், வெண்பா கீதாயன் குழுவுக்கு அவ்வளவு சிரமமெல்லாம் தேவைப்படவில்லை. ஒரு சாயம்போன வாடகை கோர்ட் ஷூட், நாலு ப்ரிண்ட் அவுட் ஜெராக்ஸ் கையில் இருந்தால் போதுமானது.!?!?! (What a Pitty)

தங்களது கருத்துக் கணிப்பின் அடிப்படைக் கேள்விகளாகத் 'தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் விபரம்' ஆகிய இரண்டுமே இருந்தன. அன்றாடப் பிரச்னைகள் குறித்துக் கேட்கவில்லை என்கிறார்கள். (பெட்ரோல் டீசல் விலை தினசரி மாறுபாடுக்கு உள்ளாவது என்பதால் அதனை முக்கியமாகக் கொள்ளவில்லை என்கிறார்).

நிற்க,

திமுக வேட்பாளர் பட்டியல் வெளியான நாள் 12-03-2021. திமுக தேர்தல் வாக்குறுதி வெளியான நாள் மார்ச் 13-2021

அதிமுக முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 5ம் தேதியன்றும், இரண்டாம்கட்ட வேட்பாளர் பட்டியல் 10-03-2021 அன்றும் வெளியாகின.

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானது மார்ச் 14-2021 (வெளியீட்டு நிகழ்ச்சியில் பாதி பக்கங்களில் ப்ரிண்ட் ஆகவில்லை என்பதால் மறுநாள் முழு அறிக்கை வெளியானது).

கூட்டணி மற்றும் தனித்துப் போட்டியிடும் கட்சிகள் அனைத்துமே இதன் பிறகு வந்த நாட்களிலே தேர்தல் அறிக்கையையும், ஒரு சில கட்சிகளில் ஒரு வாரம் முன்னதாக வேட்பாளர் விபரங்கள் அறிவிக்கப்பட்டன.

எப்படிப் பார்த்தாலும் மார்ச் மாதம் முதல் வாரத்திற்குப் பிறகே வேட்பாளர் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை ஆகியவை வெளியாகியுள்ளன.

இவர்களது டுபாக்கூர் கருத்துக்கணிப்பு டீம், இரண்டு மாதங்களாக அல்லும் பகலும் என்ன டேட்டாவை கையில் வைத்துக் கொண்டு 234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்பு நடத்தியதாம்?

இரண்டு வாரம் முன்பு வெளியான அறிவிப்புகளைக் கொண்டு 2 மாதங்களாக கருத்துக் கணிப்பு நடத்தினோம் என்பது என்னவிதமான லாஜிக். வாங்கின காசுக்குக் கூவுவதற்கு எதற்கு நமக்கு சிவாஜி பட பஞ்ச் வசனமும் அவ்வளவு எகத்தாளமும்.

ஆகவே, அரைகுறை மழுமட்டைகள் வழக்கம்போலத் தங்களுக்கு என்ன வருமோ அதை உருப்படியாகச் செய்யலாம். அது தங்கச் சங்கிலி திருட்டு மாதிரியான சம்பவங்களை அல்ல என்பதை இங்கு கவனமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

- கார்த்திக் புகழேந்தி, எழுத்தாளர்

banner

Related Stories

Related Stories