திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர், உடையானந்தல், அழகானந்தல், கன்னப்பந்தல், கொளக்குடி உள்ளிட்ட கிராமங்களில் தி.மு.க முன்னாள் அமைச்சர் திருவண்ணாமலை தொகுதி தி.மு.க வேட்பாளர் எ.வ.வேலு உதயசூரியன் சின்னத்திற்கு திறந்த வெளி வேனில் நின்று வாக்கு சேகரித்தார்.
வாக்கு சேகரிக்க வந்த எ.வ.வேலுவுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் வரவேற்றனர். உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து போது பேசிய எ.வ.வேலு, கடந்த 70 ஆண்டு காலமாகமாக ரிசர்வ் வங்கியில் சேமித்து வைத்திருந்த நம் பணத்தை ஒரே நாளில் 1.75 இலட்சம் கோடியை எடுத்து ஊதாரித்தனமாக செலவு செய்தவர் மோடி.
தற்போது நம் நாட்டினுடைய கடன் 160 லட்சம் கோடி உள்ளதாகவும் அதை திருப்பி செலுத்த நம் மீது பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலையின் மூலம் வரி வசூல் செய்து நாட்டு மக்களை வஞ்சித்து வருகிறார் மோடி. தங்கத்தின் விலை இன்று இரண்டு மடங்கு உயர்ந்திருப்பதற்கு காரணம் மோடி என்று எ.வ.வேலு குற்றச்சாட்டினார்.
முதலமைச்சர் எடப்பாடி மோடியுடன் கூட்டணி வைத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு செய்யும் நன்றி இதுதானா என்று எ.வ.வேலு கேள்வி எழுப்பினார். மோடி வாங்கிய கடனுக்கு நம்மீது வரியை செலுத்தி மக்களிடம் வசூலிப்பவர் மோடி என்றும் கலைஞர் ஆட்சியில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை எவ்வளவு இருந்தது என்றும் தற்போது உள்ள ஆட்சியில் எவ்வளவு விலை ஏற்றம் உள்ளது என்றும் பட்டியலிட்டு மக்களிடம் பேசினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கூறியதுபோல் ஆட்சியை நடத்தாத எடப்பாடி அரசு மோசமான ஆள் என்று ஜெயலலிதா கூறிய மோடியுடன் கூட்டணி வைத்திருப்பது நியாயம்தானா என்றும் கேள்வி எழுப்பினார்.