திமுக அரசு

எந்தெந்த தொகுதியில் யார் யார்? - தி.மு.க கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு! #Election2021

தி.மு.க கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ம.தி.மு.க, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த தொகுதியில் யார் யார்? - தி.மு.க கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு! #Election2021
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது. தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களமிறங்குகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.கழக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

தி.மு.க கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை விபரம்:

காங்கிரஸ் - 25

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 6

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 6

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் - 6

விடுதலை சிறுத்தைகள் கட்சி - 6

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 3

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 3

மனிதநேய மக்கள் கட்சி - 2

தமிழக வாழ்வுரிமை கட்சி - 1

ஆதித்தமிழர் பேரவை - 1

மக்கள் விடுதலைக் கட்சி - 1

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் - 1

இவ்வாறாக, கூட்டணி கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், ம.தி.மு.க தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. கொ.ம.தே.க 3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 2 தொகுதிகளில் ஒன்றில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.

மேலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தலா ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

இதன்மூலம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 61 இடங்களில் 14 இடங்களில் ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. தி.மு.க போட்டியிடும் தொகுதிகளையும் சேர்த்து இந்த முறை 187 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ களமிறங்குகிறது.

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் விபரம் வருமாறு :

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள்:

பொன்னேரி (தனி)

சோளிங்கர்

ஸ்ரீவைகுண்டம்

தென்காசி

சிவகாசி

உடுமலைப்பேட்டை

மயிலாடுதுறை

ஊத்தங்கரை (தனி)

உதகமண்டலம்

கோவை தெற்கு

ஈரோடு கிழக்கு

காரைக்குடி

வேளச்சேரி

ஸ்ரீபெரும்புதூர் (தனி)

கிள்ளியூர்

விளவங்கோடு

குளச்சல்

மேலூர்

அறந்தாங்கி

விருதாச்சலம்

திருவாடனை

கள்ளக்குறிச்சி (தனி)

நாங்குநேரி

ஓமலூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி)

எந்தெந்த தொகுதியில் யார் யார்? - தி.மு.க கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு! #Election2021

விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகள்:

காட்டுமன்னார்கோவில் (தனி)

செய்யூர் (தனி)

வானூர் (தனி)

நாகப்பட்டினம்

அரக்கோணம் (தனி)

திருப்போரூர்

எந்தெந்த தொகுதியில் யார் யார்? - தி.மு.க கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு! #Election2021

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடும் 3 தொகுதிகள்:

கடையநல்லூர் - முகமது அபூபக்கர்

சிதம்பரம் - அப்துல் ரஹ்மான் ரப்பானி

வாணியம்பாடி - முகம்மது நயீம்

எந்தெந்த தொகுதியில் யார் யார்? - தி.மு.க கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு! #Election2021

ம.தி.மு.க போட்டியிடும் 6 தொகுதிகள் : அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள்

மதுராந்தகம் (தனி) - மல்லை சத்யா

சாத்தூர் - ரகுராமன்

வாசுதேவநல்லூர் (தனி) - சதன் திருமலைக்குமார்

பல்லடம் - முத்துரத்தினம்

அரியலூர் - சின்னப்பா

மதுரை தெற்கு - பூமிநாதன்

எந்தெந்த தொகுதியில் யார் யார்? - தி.மு.க கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு! #Election2021

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகள்:

பவானிசாகர் (தனி)

திருப்பூர் வடக்கு

வால்பாறை (தனி)

சிவகங்கை

திருத்துறைப்பூண்டி (தனி)

தளி

எந்தெந்த தொகுதியில் யார் யார்? - தி.மு.க கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு! #Election2021

ஆதித்தமிழர் பேரவை போட்டியிடும் தொகுதி:

அவிநாசி (தனி)

மக்கள் விடுதலைக் கட்சி போட்டியிடும் தொகுதி:

நிலக்கோட்டை (தனி)

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சி போட்டியிடும் தொகுதி:

உசிலம்பட்டி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போட்டியிடும் தொகுதிகள்:

பெருந்துறை

திருச்செங்கோடு

சூலூர்

எந்தெந்த தொகுதியில் யார் யார்? - தி.மு.க கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் அறிவிப்பு! #Election2021

மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள்

பாபநாசம்

மணப்பாறை

தமிழக வாழ்வுரிமை கட்சி போட்டியிடும் தொகுதி

பண்ருட்டி

banner

Related Stories

Related Stories