நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடுவதாக அக்கட்சியினர் தெரிவித்த முதலே தேர்தல் விதிமுறை மீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மஞ்சூர் பகுதியில் பாஜக மாவட்ட பிரதிநிதி மயில்வாகனம் தலைமையில் தொழில்துறை விண்ணப்ப படிவங்களை கொண்டு வந்து தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் இலவசமாக தையல் மிஷின் வழங்கப்படும் என கூறியிருக்கிறார்கள்.
இதனையடுத்து வாக்காளர்களிடம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெற்றுக்கொண்டு, பாஜக சார்பில் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
இதை அறிந்த அப்பகுதி திமுகவினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பாஜகவினர் வழங்கிய டோக்கன்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர் .