நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் (ஜூன் 1) நிறுவடைகிறது. தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், தேர்தல் முடிவுக்காக காத்திருக்கிறது. நாட்டு மக்களும் ஜூன் 4-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுக்காக எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
இந்த தேர்தல் பாசிச பாஜகவிடம் இருந்து நமது நாட்டை மீட்கும் கடைசி முயற்சி என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தது. ஒரு பக்கம் நாட்டை காப்பாற்றத் துடிக்கும் இந்தியா கூட்டணி, மறுபக்கம் பாஜக தலைமையிலான NDA கூட்டணி கடும் நெருக்கடியில் இந்த தேர்தலை சந்தித்தது. தென் மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கு வலுவான ஆதரவுகள் இருந்தபோதிலும், வட மாநிலங்களில் பாஜகவுக்கான எதிர்ப்பலைகள் எழுந்ததை இந்த தேர்தல் மூலம் காண முடிகிறது.
குறிப்பாக பாஜக ஆளும் குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பாஜகவுக்கான எதிர்ப்புகளை மக்கள் மத்தியில் காணமுடிகிறது. அதே போல் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளும் இந்தியா கூட்டணிக்கான ஆதர்வுகளையே பிரிதிபலித்தது. இந்த முறை மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் அரசையே மக்கள் விரும்புவததாக கருத்துகணிப்புகள் மூலம் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நாடே இந்தியா கூட்டணி வெற்றி பெரும் என்று எதிர்பார்த்துகாத்திருக்கும் சமயத்தில், இன்று இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது.
டெல்லியில் உள்ள மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிபிஐ (எம்), ஆம் ஆத்மி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் சார்பாக தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.