நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்.19-ம் தேதி தொடங்கிய இந்த தேர்தல் ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறும்; ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 3 கட்ட தேர்தல் நிறைவடைந்த நிலையில், நாளை மறுநாள் (மே 13) 4-ம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு ஆந்திரா, மேற்கு வங்கம், தெலங்கானா, பீஹார் உள்ளிட்ட 10 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டவாறே, தற்போது தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது.
10 மாநிலங்களில் 96 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேரம் காலி 7 மணி முதல் மாலை 6 மணி வரை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் பின்வருமாறு :
* ஆந்திர பிரதசம் - 25
* தெலங்கானா - 17
* பீகார் - 5
* ஜார்க்கண்ட் - 4
* மேற்கு வங்கம் - 8
* உத்தர பிரதேசம் - 13
* மத்திய பிரதேசம் - 8
* மகாராஷ்டிரா - 11
* ஒடிஸா - 4
* ஜம்மு & காஷ்மீர் - 1