சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி அரியலூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, மணக்கால் கிராமத்தில் வாக்குகள் சேகரித்து பேசிய பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி திருமாவளவனை விமர்சித்து பேசியுள்ளார்.
அப்போது, அங்கிருந்த பொதுமக்கள்பிரச்சார வாகனத்திற்கு முன்பு வந்து, பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியை பார்த்து எங்கள் தலைவரை தவறாக பேசவேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி தொடர்ந்து அவரை விமர்சித்து வந்தார்.
மேலும், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களை பார்த்து, ஆதி திராவிடர் சமுதாயம் அராஜகம் செய்வதால்தான் பிற சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மதிக்கவில்லை என்று கூறினால். அவரின் இந்த பேச்சுக்கு அங்கிருந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், அவரை கிராமத்தில் இருந்து வெளியேறுமாறும் அந்த பகுதி பொதுமக்கள் கூச்சலிட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவை சேர்ந்த சிதம்பரம் வேட்பாளர் கார்த்தியாயினி, அக்கட்சியின் கொள்கைகளை போலவே சமுதாயத்தினரை இழிவு படுத்தி பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.