தேர்தல் 2024

“தோலுரிக்கப்பட்ட பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ பாணி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !

பா.ஜ.க.வின் ‘வாஷிங் மெஷின்’ பாணியை ஆதாரப்பூர்வமாகத் The Indian Express நாளிதழ் தோலுரித்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தோலுரிக்கப்பட்ட பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ பாணி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக ஆளாத மாநிலங்களை குறிவைத்து ஒன்றிய பாஜக அரசு தங்கள் அதிகாரத்தை வரையறையின்றி கட்டவிழ்த்து வருகிறது. ஒன்றிய பாஜக அரசு அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ என அரசின் அமைப்புகளை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறது. தொடர்ந்து இதற்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகிறது.

மேலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பலரது வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருவதோடு, அவர்களை மிரட்டி பாஜகவிலும் இணைத்து வருகிறது. இவ்வாறு மற்ற அரசியல் கட்சிகளில் இருக்கும் முக்கிய நபர்களை தேர்ந்தெடுத்து, பாஜக மிரட்டி தனது பக்கம் இழுத்து வருகிறது. அப்படி அடிபணியாத ஆட்களை கைது செய்து தொல்லைகொடுத்து வருகிறது.

“தோலுரிக்கப்பட்ட பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ பாணி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !

இதனாலே பாஜக அரசை எதிர்க்கட்சிகள் பாசிச அரசு என விமர்சனம் செய்து வருகின்றனர். தொடர்ந்து கண்டனங்கள் போராட்டங்கள் என எழுந்த நிலையில் கூட, பாஜக அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளாமல் இருந்து வருகிறது. அதே போல் ஊழல்வாதி, கொலை குற்றவாளி, பாலியல் வன்கொடுமை குற்றவாளி, பயங்கரவாதி என யார் மீதெல்லாம் குற்றங்கள் சுமத்த படுகிறதோ, அவர்கள் எல்லாம் பாஜகவில் இணைந்தால் அது நீக்கப்பட்டு விடுகிறது.

இவ்வாறாக பலரும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பல முக்கிய உறுப்பினர்கள் வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளனர். யாரெல்லாம் பாஜகவில் இணைந்தார்களோ, அவர்கள் எல்லாம் தற்போது புனிதராகி விடுகிறார்கள் என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தற்போது அதனை The Indian Express நாளிதழும் உறுதிப்படுத்தியுள்ளது.

அதாவது, 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து சுமார் 25 முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை குறிவைத்து, ED, IT, CBI ஆகியவற்றை பயன்படுத்தி ரெய்டு செய்துள்ளது. ரெய்டு நடந்த சில நாட்களிலேயே அவர்கள் தான் இருந்த அரசியல் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைத்தனர். பாஜகவில் இணைந்தபிறகு அவர்கள் மீதுள்ள வழக்குகள் திடீரென மாயமாகியுள்ளது.

“தோலுரிக்கப்பட்ட பாஜகவின் ‘வாஷிங் மெஷின்’ பாணி” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !

குறிப்பாக காங்கிரஸ் - 10, தேசியவாத காங்கிரஸ் - 4, சிவ சேனா - 4, திரிணாமுல் காங்கிரஸ் - 3, தெலுங்கு தேசம் கட்சி - 2, சமாஜ்வாடி கட்சி - 1, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி - 1 என மொத்தம் 25 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதில் குற்றவாளிகள் என்று கூறப்படும் நபர்களில் 24 பேர் பாஜகவுக்கு தாவி விட்டனர். இதையடுத்து அவர்கள் மீதுள்ள வழக்குகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

பாஜகவில் இணைந்தபிறகு, அதில் 3 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளதோடு, 20 வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் அந்த பட்டியலும் வெளியாகியுள்ளது. அதில், தற்போதுள்ள அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, பாஜக எம்.பி வேட்பாளர் ஜிண்டால், மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், பாஜக எம்.பி சஞ்சய் சேத் உள்ளிட்ட பலரும் அடங்குவர்.

இந்த நிலையில், The Indian Express-ன் செய்தியை குறிப்பிட்டு எதிர்க்கட்சியினர் பாஜகவை விமர்சித்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :

“பா.ஜ.க.வுக்குத் தாவிய எதிர்க்கட்சித் தலைவர்கள் 25 பேரில், 20 பேர் மீதான ஊழல் வழக்குகளில் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், 3 பேர் மீதான வழக்குகள் மொத்தமாக முடித்தே வைக்கப்பட்டு விட்டன. 10 ஆண்டு பா.ஜ.க. ஆட்சி என்பது இந்தியாவின் உயர் விசாரணை அமைப்புகளை எவ்வளவு இழிவான நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதற்கு இதைவிடச் சான்று வேண்டுமா?

“பேச நா இரண்டுடையாய் போற்றி” எனப் பேரறிஞர் அண்ணா அன்று சொன்னது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ… ஊழல்வாதிகளை எல்லாம் கட்சியில் இணைத்து உத்தமர்களாக்கிவிட்டு, ஊழலை ஒழிப்போம் எனக் கூசாமல் புளுகும் பிரதமருக்கு நன்றாகவே பொருந்துகிறது. மோடியின் குடும்பம் என்பது ‘E.D., I.T., C.B.I.’தான்!

banner

Related Stories

Related Stories