தேர்தல் 2024

நாடாளுமன்ற தேர்தல் 2024 : 10 தென் மாவட்டங்களுக்கான திமுக-வின் சிறப்பான வாக்குறுதிகள் என்னென்ன?

நாடாளுமன்ற தேர்தல் 2024 : 10 தென் மாவட்டங்களுக்கான திமுக-வின் சிறப்பான வாக்குறுதிகள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் ஏப்ரல்.19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவுக்கான பல முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றிருந்தது.

அதில் ஒவ்வொரு மாவட்டங்களுக்கான திட்டங்கள் குறித்த அறிவிப்பும் வெளியானது. அந்த பட்டியலில் 10 தென் மாவட்டங்களுக்கான அறிவிப்பு பின்வருமாறு :

=> திண்டுக்கல் :

1. திண்டுக்கல் - சபரிமலை இடையே இரயில் சேவை அமைக்க ஆராயப்படும்.

2. திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்குத் தனி ரயில் வசதி ஏற்படுத்திட பரிசீலிக்கப்படும்.

=> சிவகங்கை

காரைக்குடி முதல் நத்தம் வரை 4 வழிச் சாலை, (வழி சிங்கம்புணரி, கொட்டம்பாட்டி) அமைக்கப்படும்.

=> மதுரை

1. மதுரை - திருப்பதி ரயில் மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க ஒன்றிய அரசிடம் தி.மு.க. பரிந்துரைக்கும்.

2. மதுரையில் இருந்து போடி வரை செல்லும் ரயிலை லோயர் கேம்ப் வரை நீட்டிக்க ஆவன செய்யப்படும்.

3. மதுரை விமான நிலையம் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தப்படும்.

4. மதுரையில் ஒன்றிய அரசின் தொழில் நிறுவனங்கள் அமைக்கப்படும்

=> தேனி

1. பேபி அணையையும் முல்லைப் பெரியாறு அணையையும் பலப்படுத்த ஆவன செய்யப்படும்.

2. வாழை மற்றும் திராட்சை ஆகியவற்றிற்குத் மதிப்புக் கூட்டல் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

=> விருதுநகர்

1. காரியாபட்டி இரயில்வே நிலையம் அமைக்கப்படும்.

2. சிவகாசி பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க சீனப் பட்டாசு இறக்குமதி தடை செய்யப்படும்.

=> இராமநாதபுரம் :

இராமநாதபுரம் மாவட்டம் பிரப்பன்வலசை ரயில்வே வழித்தடத்தைக் கடக்க சாலை மேம்பாலம் அமைக்கப்படும்.

இராமேஸ்வரம் - சென்னை, இராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே சுற்றுலா கப்பல்/படகுப் போக்குவரத்துச் சேவை ஏற்படுத்தப்படும்.

நாடாளுமன்ற தேர்தல் 2024 : 10 தென் மாவட்டங்களுக்கான திமுக-வின் சிறப்பான வாக்குறுதிகள் என்னென்ன?

=> திருநெல்வேலி :

1. திருநெல்வேலியைத் தலைமை இடமாகக் கொண்டு திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய புதிய ரயில்வே கோட்டம் அமைக்க ஆவன செய்யப்படும்.

2. அம்பாசமுத்திரம், வி.கே.புரம் சாலையில் அம்பை ராணி பள்ளியின் அருகில் உள்ள ரயில்வே கேட்டில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.

3. திருநெல்வேலிமாவட்டத்தில் உள்ள எட்டு கடற்கரை கிராமங்களிலும் தூண்டில் வளைவு இல்லாத கிராமங்களுக்குத் தூண்டில் வளைவு அமைக்கப்படும்.

=> தூத்துக்குடி :

1. தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கப்பல் போக்குவரத்து ஏற்படுத்தித் தரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

2. தூத்துக்குடி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாகத் தரம் உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

3. முத்துநகர் விரைவு ரயில் சேவை போல், சென்னை செல்ல மேலும் ஒரு இரயில் சேவை ஏற்படுத்தப்படும்.

4. தூத்துக்குடி வி.எம்.எஸ் நகரில் ஐந்தாவது ரயில்வே கேட் மற்றும் மேம்பாலம் அமைக்கப்படும்.

5. நாசரேத் பகுதியில் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட திருச்செந்தூர் கூட்டுறவு நூற்பாலை அமைந்திருந்த இடத்தில், பொதுமக்களும் சிறு, குறு வியாபாரிகளும் பயன்பெறும் வகையில் மாற்றுத்தொழிற்சாலை அமைத்து, இப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும், இங்குள்ள வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திடவும் ஆவன செய்யப்படும்.

6. நாசரேத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் பிடாரனேரி கிராமத்தில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை அமைந்துள்ள பகுதியில் புதிய தொழில் நிறுவனங்களை நிறுவி அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி, வாழ்வாதாரம் காத்திட ஆவன செய்யப்படும்.

7. காயல்பட்டினம் மற்றும் மீளவிட்டான் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்

8. தூத்துக்குடியில் உற்பத்தியாகும் பனைபொருள்களுக்கு மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்ய வழி வகை செய்யப்படும்.

=> தென்காசி :

1. திருநெல்வேலி - சங்கரன்கோவில் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஆலங்குளம், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாகச் சங்கரன்கோவிலை இணைக்கும் புதிய ரயில்பாதை அமைக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.

2. கேரளா, கோவை மற்றும் சென்னை செல்லும் ரயில்கள் கடையம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வழிவகை செய்யப்படும்.

=> கன்னியாகுமரி :

1. கன்னியாகுமரி முதல் களியக்காவிளை வரை மற்றும் காவல்கிணறு முதல் நாகர்கோவில் வரை நான்கு வழிச் சாலைக்காக நிலங்களை இழந்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க ஆவண செய்யப்படும்.

2. குமரி மாவட்டத்தில் கிடைக்கும் மீன்களைப் பதப்படுத்தி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தகுந்த வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் மீன் பதப்படுத்தும் நிலையம் உருவாக்கப்படும்.

3. விளவங்கோடு தொகுதியில் ரப்பர் தொழிற்சாலை அமைக்க ஆவன செய்யப்படும்.

4. ஏ.வி.எம் கால்வாயைச் சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர ஆவன செய்யப்படும்.

banner

Related Stories

Related Stories