இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் 10 ஆண்டுகால பாசிச பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதுமுள்ள எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளனர். தமிழ்நாட்டிலும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவடைந்தது.
1. தி.மு.க. (DMK) - 21
2. காங்கிரஸ் (Congress) - 10 (தமிழ்நாடு - 9, புதுச்சேரி - 1)
3. ம.தி.மு.க. (MDMK) - 1
4. சி.பி.ஐ.(எம்) (CPIM) - 2
5. சி.பி.ஐ. (CPI) - 2
6. வி.சி.க. (VCK) - 2
7. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (IUML) - 1
8. கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (KMDK) - 1 - என 40 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கூட்டணி கட்சியினர் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரத்தில் மீண்டும் ரவிக்குமார் எம்.பி போட்டியிடுவதாகவும், அதேபோல் சிதம்பரம் தொகுதியில் மீண்டும் தொல் திருமாவளவன் எம்.பி போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.