நாடளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், ஏப்ரல் 19-ம் தேதி முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் நடைபெறுகிறது. மேலும் இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (20.03.2024) தொடங்குகிறது இந்த நிலையில், இதற்கான தேர்தல் விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அவை பின்வருமாறு :
* தமிழ்நாட்டில் நாளை காலை 11:00 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம்.
* தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர், டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
* வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.
* வேட்புமனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி.
* வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்கள் 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும். - ஆகும்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் குறித்த முழு அறிவிப்பையும் தேர்தல் வெளியிட்டது. அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரிக்கு வெளியான அட்டவணை பின்வருமாறு :
1. வேட்புமனு தாக்கல் ஆரம்பம் - மார்ச் 20
2. வேட்புமனு தாக்கல் நிறைவு - மார்ச் 27
3. வேட்புமனு பரிசீலனை - மார்ச் 28
4. வேட்புமனு திரும்பப் பெற கடைசி நாள் - மார்ச் 30
5. வாக்குப்பதிவு நடைபெறும் நாள் - ஏப்ரல் 19
6. வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவுகள் அறிவிப்பு - ஜூன் 4