கழகத்தின் மூத்த முன்னோடியும், சிறந்த பேச்சாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை முன்னாள் கழக உறுப்பினருமான ச.விடுதலை விரும்பி அவர்கள் வயது மூப்பின் காரணமாக கோவையில் தமது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு அவர் நெஞ்சம் நெகிழ்ந்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது :-
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
சென்னை.
பெருமதிப்பிற்குரிய தலைவர் அவர்களுக்கு!
வணக்கம், அண்மையில் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றிருந்த போது தங்களின் அறிவுறுத்தலின்படி என்னைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் நலம் விசாரித்து ஆறுதல் அளித்தார்.
கழகத்தின் மூத்த தொண்டர்களில் ஒருவனான என்னைப் பேணிப் பாதுகாத்து வரும் தங்களின் அன்பிற்கு நெஞ்சம் நிறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களின் ஆழமான சிந்தனையும் ஈடு இணையற்ற செயல்திறனும் ஒருங்கிணைந்ததால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பும் வளர்ச்சியும் உறுதி செய்யப்படுவதுடன், நமது வருங்கால தலைமுறையையும், வாழ வழிவகுக்கும் என்று உளமார நம்புகிறேன்.
தமிழ்நாட்டு வரலாற்றில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் அவர்களையும் போல் தாங்களும் நிரந்தரமாக இடம் பெற்று விட்டீர்கள் என்பதை நினைத்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி. தங்கள் அன்பை என்றும் மறவா ச.விடுதலை விரும்பி" இவ்வாறு அவர் தமது கடிதத்தில் கூறியுள்ளார்.