தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவை திட்டமிட்டுச் சிதைக்கும் நீட் தேர்வுக்கு எதிராகவும், குளறுபடி எடப்பாடி அரசால் நடக்கும் ஏற்றத்தாழ்வு மிக்க ஆன்லைன் வகுப்பினை ஒழுங்குபடுத்தக் கோரியும், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையில் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி, தலைமைக் கழகத்தின் ஆலோசனையின் பேரில் இளைஞரணி-மாணவரணி சார்பில் தமிழகம் தழுவிய அளவில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், ஆன்லைன் வகுப்பு முறையை ஒழுங்குபடுத்தக்கோரியும் மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் அணி, மாணவர் அணியினர் அவரவர் இல்லம் முன் ஐந்து பேருக்கு மிகாமல் நின்று கறுப்புக்கொடி ஏந்தி கண்டன முழக்கமிட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.