OBC இடஒதுக்கீடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடியுடன் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று தொலைபேசியில் பேசியுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க தலைவர் முக.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ஓபிசி இடஒதுக்கீடு குறித்து கடிதம் எழுதிய நான், இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடியுடன் ஓபிசி இடஒதுக்கீடு குறித்து பேசினேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அதில் கூறியிப்பதாவது, “இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு சட்டம் இயற்றலாம்.
மத்திய - மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள், இந்திய மருத்துவக் கவுன்சில் என மூன்று தரப்புக் குழு அமைத்து, கலந்தாலோசித்து இடஒதுக்கீடு வழங்கும் நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் மூன்று மாதங்களில் முடிவை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உடனடியாக செயல்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.