தி.மு.க

கொரோனாவுடன் போராடும் வேளையில் புதிய டெண்டர்களுக்கு என்ன அவசியம்? கேள்விகளை அடுக்கும் திமுக MLA கார்த்திக்

பொதுமக்களுக்கு பயனுள்ள வளர்ச்சித் திட்டங்கள் என்றால் அதை முதலில் வரவேற்பதும் பொதுமக்களுக்கு எந்தவொரு பயனும் இல்லாமல், மக்களின் வரிப்பணம் வீணாக போகின்றது என்றால் அதை முதலில் எதிர்ப்பதும் தி.மு.கதான்.

கொரோனாவுடன் போராடும் வேளையில் புதிய டெண்டர்களுக்கு என்ன அவசியம்? கேள்விகளை அடுக்கும் திமுக MLA கார்த்திக்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட , எதிர்க்கட்சி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், நான் மக்களின் சார்பாக கேள்வி கேட்டால், சரியான, முறையான பதில் அளிக்காமல், ஆத்திரத்தில் கத்துவதும், கதறுவதும் சிறுபிள்ளைத் தனமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. இந்நிலையில் சாதாரண மக்கள், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களான உங்களிடம் எப்படி கேள்வி கேட்க முடியும்?" எனக் கேள்வி எழுப்பி கோவை மாநகர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ., அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் இந்திய மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகம் திகழ்கிறது என்று அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் கூறியுள்ளார். அப்படியென்றால் நாள்தோறும் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போவது ஏன்? நோய்த் தொற்றின் தலைநகராகச் சென்னை மாறிக்கொண்டிருப்பது ஏன்? பிறகு ஏன் இந்திய அளவில் கொரோனா தொற்றில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது?

உலகநாடுகள் அனைத்தும் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு, மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் பாதிக்கப்பட்டு கண்ணுக்குத் தெரியாத, கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து போராடி வருகிறது. குறிப்பாக, வல்லரசு நாடுகளே, தொற்று நோய்க்கு மருந்துக் கண்டுப்பிடிக்காத நிலையில் கடுமையாகப் போராடி வரும்போது, தமிழகத்தில் பல ஆயிரம் கோடிகளை புதிய டெண்டர் பணிகளுக்கு ஒதுக்கும் அவசியம், உள்நோக்கம் என்ன?

டெண்டர் பணிகளுக்கு ஒதுக்கப்படும் அவ்வளவிற்கான பணம் கொரோனா சிகிச்சைகளுக்காக ஒதுக்கப்பட்டதா? வாழ்விழந்து வறுமையில் வாடும் மக்களுக்கு,ஒதுக்கப்பட்டதா? மக்களுக்கான மின்கட்டண சலுகைகளுக்கு ஒதுக்கப்பட்டதா? வீட்டு வரி, குடிநீர் சலுகைகளுக்கு ஒதுக்கப்பட்டதா? புதிய டெண்டர் பணிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் ஏன்?

கொரோனாவுடன் போராடும் வேளையில் புதிய டெண்டர்களுக்கு என்ன அவசியம்? கேள்விகளை அடுக்கும் திமுக MLA கார்த்திக்

அமைச்சர்கள் பங்குபெறும் நிகழ்ச்சிகளில் கூட்டமாக சேர்ந்து தனிமனித இடைவெளியை காற்றில் பறக்க விடுவது ஏன்? என்ற கேள்விகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, எதிர்க்கட்சி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில், மக்களின் சார்பாக நான் கேள்வி கேட்டால், சரியான முறையான பதில் அளிக்காமல்; ஆத்திரத்தில் கத்துவதும், கதறுவதும் சிறுபிள்ளைத் தனமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது. இந்நிலையில் சாதாரண மக்கள், அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களான உங்களிடம் எப்படி கேள்வி கேட்க முடியும்?

கொரோனா நோய்த் தொற்று வீரியமாக உள்ள இந்தச் சூழலில், மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, பச்சை புல்வெளிகளும், I love Covai என்ற வாசகங்களும், மக்களை ஏமாற்றும் வித்தை என்பது மக்களுக்கு தெரியாது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இது “பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகமே இருண்டதென்று நினைக்குமாம்” என்பது போல உள்ளது.

கோவை மாவட்ட வளர்ச்சிக்கு 50 ஆண்டுகள் இல்லாத வகையில் தொலைநோக்குப் பார்வையோடு திட்டங்களை செய்து வருவதாக சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் குரலாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். கோவையில், தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மாற்றியமைத்து மக்களுக்கு பயனில்லாமல் செயல்படுத்தினீர்களே தவிர, கடந்த 9 ஆண்டுகளில் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில், கோவையில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில், உருப்படியாக ஒரே ஒரு திட்டத்தை செய்ததாக குறிப்பிட்டு கூற முடியுமா?

அ.தி.மு.க. ஆட்சியில், அனைத்து திட்டங்களும் ஏட்டளவில்தான் இருக்கும்; செயல்பாட்டில் ஒன்றும் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில், மக்களின் நிலை என்ன என்பது நான் சொல்லி மக்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை; அவர்களுக்கே நன்றாகத் தெரியும்! உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் போது போக்குவரத்து நெருக்கடியை குறைக்க காந்திபுரத்தில் 3 அடுக்கு மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு நிதியும் ஒதுக்கப்பட்டது. தி.மு.கவால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதற்காக வரைபடத்தை மாற்றியமைத்து 2 அடுக்கு மேம்பாலம் அமைத்தீர்களே இன்று அதன் பயன் என்ன?

கொரோனாவுடன் போராடும் வேளையில் புதிய டெண்டர்களுக்கு என்ன அவசியம்? கேள்விகளை அடுக்கும் திமுக MLA கார்த்திக்

கட்டிமுடிக்கப்பட்ட பாலத்தால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. போக்குவரத்து நெரிசலுக்கும் தீர்வு இல்லை. மக்களின் வரிப்பணம் வீணாக செலவு செய்யப்பட்டதுதான் உங்களின் தொலைநோக்குத் திட்டமா ? அந்தப் பாலத்தின் மீது பயணிப்பதற்கே மக்கள் பயந்து போய் "சூசைடு பாய்ண்ட்" என மக்களால் அழைக்கப்பட்டு வருகின்றது. கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் 9 ஆண்டுகளாக கிணற்றில் போட்ட கல்லாக இருப்பது யாரால்? மக்களைச் சந்திக்க பயந்து கொண்டு , கடந்த நான்கு ஆண்டுகாலமாக உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப் போட்டது யார்? அ.தி.மு.க. ஆட்சியில் தொலைநோக்குத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், மக்களைச் சந்திக்க பயம் ஏன்?

கழகத் தலைவர் அவர்கள், “ஒன்றிணைவோம் வா” முன்னெடுப்பின்கீழ் 18 இலட்சம் உதவி எண் கோரிக்கைகள், 76 இலட்சம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், 51 இலட்சம் முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி, 28 இலட்சம் சமைத்த உணவுப் பொட்டலங்கள், 7 இலட்சம் அரசிடம் சமர்ப்பித்த கோரிக்கைகள் என்று ஓர் அரசாங்கம் செய்ய வேண்டியதை தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், தனிமனித இடைவெளியுடன், தி.மு.க. கழக நிர்வாகிகள் துணையுடன் தனியொரு மனிதராக செய்துள்ளார்.

ஆனால், கடந்த ஒரு மாதமாக, கோவையில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையிலே பந்தயச் சாலை, பேரூர், குறிச்சி குளம், ஆலாந்துறை, சூலூர், இருகூர் ஆகிய பகுதிகளில், நடந்த நிகழ்ச்சிகளில், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காமலும், அரசு அதிகாரிகள், நூற்றுக்கணக்கான அ.தி.மு.கவினர் உள்ளிட்டவர்கள் கூட்டமாக, ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்றுகொண்டு, அரசு அறிவித்த “தனிமனித இடைவெளி” வேண்டும் என்ற அறிவிப்பை சிறிதும் பொருட்படுத்தாமல், மேற்கண்ட நிகழ்சிகளில் பங்கேற்றுக் கொண்டு இருந்தது மீண்டும் நோய்த் தொற்று பரவும் அபாயத்திற்கு காரணம் என்பது ஏன் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருக்கு தெரியவில்லை?

தி.மு.க. ஆட்சியில் கோவைக்கு என்ன செய்துள்ளீர்கள் என்று ஞாபக மறதியில் இருக்கும் அ.தி.மு.க.,வின் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் கேட்கிறார். கோவை மாநகர மக்களுக்காக, சிறுவாணி குடிநீருக்கு , 1972-ம் ஆண்டு கேரள அரசோடு ஒப்பந்தங்கள் புதுப்பித்தது , அன்றைய தி.மு.க. ஆட்சியும், தமிழக முதல்வராக இருந்த தி.மு.க. தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும்தான். கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் பில்லூர் குடிநீர் திட்டம் - 1, பில்லூர் குடிநீர் திட்டம் – 2 , ஆழியார் கூட்டு குடிநீர் திட்டம், வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம் என அடுக்கி கொண்டே போகலாம். இதை நீங்கள் மட்டுமல்ல; யாராலும் மறுக்க முடியாது!

கொரோனாவுடன் போராடும் வேளையில் புதிய டெண்டர்களுக்கு என்ன அவசியம்? கேள்விகளை அடுக்கும் திமுக MLA கார்த்திக்

கோவை மாநகராட்சியில் தி.மு.க. ஆட்சியில்தான், கோவை மக்களுக்காக ஜவஹர்லால் நேரு நகரமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள், 140 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பில்லூர் 2-ம் குடிநீர் திட்டம், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு மாற்றாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தந்த திட்டம் போன்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டது.

மேலும், ஹோப் காலேஜ் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், திருச்சி சாலை ஒண்டிப்புதூர் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், வடகோவை ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், உக்கடம் புறவழிச் சாலை (BYPASS ROAD), ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் போன்ற ரயில்வே உயர்மட்ட மேம்பாலங்கள், நீலாம்பூர் புறவழிச் சாலை (BYPASS ROAD) ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், பன்மால் திட்டச் சாலை, உக்கடம் புறவழிச் சாலை, கவுண்டம்பாளையம் சாலை விரிவாக்கம், அவினாசி சாலை சித்ராவில் இருந்து காளப்பட்டி குரும்பபாளையம் வரை உள்ள சாலை விரிவாக்கம், விளாங்குறிச்சி சாலை விரிவாக்கம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பல்வேறு சாலைகள் தி.மு.க. ஆட்சியில் புதியதாக அமைக்கப்பட்டது.

கோவை விமான நிலையம் நவீனப்படுத்தியது, கோவை ரயில் நிலையம் மேம்படுத்தியது, நூற்றுக்கும் மேற்பட்ட செம்மொழி பூங்காக்கள் அமைத்தது, 300-க்கும் மேற்பட்ட இடங்களில் நவீன பேருந்து நிழற்குடைகள் அமைத்தது போன்ற பல்வேறு திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டன என்று ஞாபக மறதியில் இருக்கும் அ.தி.மு.க.,வின் சட்டமன்ற உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த இந்த அனைத்துத் திட்டங்களுமே பொதுமக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் ஆகும்.

கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த தலைவர் கலைஞர் அவர்களாலும், துணை முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த தளபதி அவர்களாலும் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டு தி.மு.க. ஆட்சியில் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது 9 ஆண்டுகளை கடந்த நிலையில் இன்றும் இந்தப் பணிகள் முடிக்கப்பட்டதா?

கொரோனாவுடன் போராடும் வேளையில் புதிய டெண்டர்களுக்கு என்ன அவசியம்? கேள்விகளை அடுக்கும் திமுக MLA கார்த்திக்

கோவையில் கட்டி முடிக்கப்பட்ட சோமனூர் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், இரத்தினபுரி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், நஞ்சுண்டாபுரம் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், ஈச்சனாரி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், சிங்காநல்லூர் – வெள்ளலூர் இணைப்பு ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், இருகூர் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் , மதுக்கரை சாலை உயர்மட்ட மேம்பாலம் என்று கோவையில் கட்டப்பட்டிருக்கும் அனைத்து மேம்பாலங்களும் தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட மேம்பாலங்கள் தான்.

இன்னும் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எச்.ஐ.எச்.எஸ் காலனி ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு ஒன்பது ஆண்டு காலமாக தடைப்பட்டுள்ளது. நீலிக் கோணாம் பாளையம் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், ஹோப் காலேஜ் தண்ணீர் பந்தல் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், கணபதி – ஆவாரம்பாளையம் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுமானப் பணிகள் 9 ஆண்டுகளுக்குப் பிறகும் “கிணற்றில் போட்ட கல்லாக” உள்ளது.

தி.மு.க. ஆட்சியில் மனைகளை முறைப்படுத்துவதற்கு அன்றைய தமிழக முதலமைச்சர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த கழகத் தலைவர் தளபதி அவர்கள் அரசாணைப் பிறப்பித்தார். அதன் காரணமாக மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 600-க்கும் மேற்பட்ட நகர்களில் அங்கீகாரமற்ற மனைப் பிரிவுகள் முறைப்படுத்தப்பட்டன.

அதன் காரணமாக தமிழக மக்களின் கருத்துக்களையும், தோழமைக் கட்சிகளின் கருத்துக்களையும் ஏற்று 2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபோது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த கழகத் தலைவர் தளபதி அவர்கள், மக்களுடைய நீண்ட காலப் பிரச்சினையாக இருந்த அங்கீகாரமற்ற மனைப்பிரிவில் வசித்து வந்த மக்களுக்கு 1980-ம் ஆண்டுக்கு முன்பு பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுக்கு சதுரடிக்கு ரூ.1.00 என்றும், 1980-க்குப் பிறகு பிரிக்கப்பட்ட மனைப் பிரிவுக்கு சதுரடிக்கு ரூ.5.00 என்றும் அங்கீகாரமற்ற மனைப் பிரிவுகள் முறைப்படுத்தப்பட்டது தி.மு.க. ஆட்சியில்தான். இதனால் குடிநீர் குழாய் இணைப்பு அமைத்தல், தார் சாலைகள் அமைத்தல், தெரு விளக்குகள் அமைத்தல் போன்ற அனைத்து பணிகளும் நடந்தது.

கொரோனாவுடன் போராடும் வேளையில் புதிய டெண்டர்களுக்கு என்ன அவசியம்? கேள்விகளை அடுக்கும் திமுக MLA கார்த்திக்

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோது சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பில் காமராசர் சாலையில் உள்ள ESI மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது.

தி.மு.க. ஆட்சியில், அவினாசி சாலையில் உள்ள டைடல் பூங்கா (Tidel Park) 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டது. கருமத்தம்பட்டி அருகே அமைந்துள்ள உற்பத்தி சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலம் நிறுவப்பட்டது. பல்லடம், சுக்காம்பாளையம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகில், 65 ஏக்கர் பரப்பரளவில் சுமார் 55.74 கோடி ரூபாய் மதிப்பில் பல்லடம் உயர் தொழில் நுட்ப ஜவுளி பூங்கா நிறுவப்பட்டது.

பொதுமக்களுக்கு பயனுள்ள வளர்ச்சித் திட்டங்கள் என்றால் அதை முதலில் வரவேற்கும் கட்சி தி.மு.க.,தான். அதேபோல் பொதுமக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லாமல், மக்களின் வரிப்பணம் வீணாக போகின்றது என்றால் அதை முதலில் எதிர்க்கும் கட்சியும் தி.மு.க.,தான். இன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்படும் அனைத்துத் திட்டங்களும் மக்களை வஞ்சித்து, மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, மக்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லாத திட்டங்கள் ஆகும்.

மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கத்தான் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சியினர் உள்ளோம். அப்படியிருக்க, மக்களுக்கு பயனில்லாத, மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத, செயலற்றுக் கிடக்கின்ற உள்ளாட்சித் துறையை பற்றி மக்களுக்கு தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் “யாருமே எதுவுமே பேசக் கூடாது“ என அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணியின் 'வாய்ஸாக' அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் அரைவேக்காட்டுத் தனமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான அன்புத் தளபதி அவர்களின் ஆலோசனையின்படி செயல்பட்டு கொண்டிருக்கும் நாங்கள் மக்களுக்காக தான் இருக்கின்றோம்.

மக்களின் பிரதிநிதியான நான் மக்கள் பிரச்சினைகளுக்காகவும் ஊழல்களுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதுதான் அறம்! பொதுமக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தோம் - போராட்டங்கள் நடத்தினோம். இன்னும் குரல் கொடுப்போம், போராட்டங்கள் நடத்துவோம். தமிழக அரசின் சர்வாதிகாரப் போக்கையும், கோவையில் உள்ளாட்சித் துறையில் நடைபெறும் முறைகேடுகளையும் மக்களின் பேராதரவோடு முறியடிப்போம்!

அல்லும் பகலும் தமிழக மக்களுக்காக ஓயாமல் உழைத்து வரும் அன்புத் தளபதி அவர்களின் தலைமையில், அ.தி.மு.க. அரசின் ஊழல் ஆட்சியை தூக்கி எறியும் வரை அறவழியில் போராடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என தி.மு.க. எம்.எல்.ஏ., நா.கார்த்திக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories