தி.மு.க

“தி.மு.க என்பது மக்கள் அரசாங்கம்; மக்களுக்காக என்றும் துணை நிற்போம்” - மு.க.ஸ்டாலின் பெருமிதம்! (Video)

நாம் அரசாங்கம் கிடையாது. அரசாங்கத்துக்கு இருக்கிற பணமோ, வசதியோ கிடையாது. ஆனாலும் எங்களை நம்பிக் கேட்ட மக்களுக்கு எங்களால முடிந்த உதவிகளைச் செய்வோம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தி.மு.க என்பது மக்கள் அரசாங்கம்; மக்களுக்காக என்றும் துணை நிற்போம்” - மு.க.ஸ்டாலின் பெருமிதம்! (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், ஊரடங்கு காரணமாக அன்றாடம் தொழில் செய்து பொருள் ஈட்டும் ஏழை எளிய மக்கள் சொல்லொனாத் துயரத்துக்கு ஆளாகியிருக்கிறார்கள். வேலையில்லாமல், உணவு உண்ணாமல் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல், சமூகநலக் கூடங்களிலும், பள்ளிகளிலும் பல்வேறு பகுதிகளில் அடைந்து கிடக்கிறார்கள். இந்நிலையில், தமிழகத்தில் உள்ள மக்களின் நலன் கருதி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தலைவர் மு.க.ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ எனும் திட்டத்தைத் தொடங்கினார். அதன் மூலம் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து நேரடியாகச் சென்று நிவாரண உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக தி.மு.க மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், “பொதுமக்களின் உதவி எண் (9073090730) துவங்கிய ஒரே வாரத்தில், 6 லட்சத்திற்கும் மேலான மக்கள் உதவி கோரியுள்ளனர். தி.மு.க மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் கண்டு நான் மனம் நெகிழ்கிறேன். இப்பேரிடரில் மக்களின் பலமாகவும் தன்னம்பிக்கைக்கு ஊன்றுகோலாகவும் நாங்கள் செயல்படுவோம் #OndrinaivomVaa” என குறிப்பிட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

“தி.மு.க என்பது மக்கள் அரசாங்கம்; மக்களுக்காக என்றும் துணை நிற்போம்” - மு.க.ஸ்டாலின் பெருமிதம்! (Video)

அந்த வீடியோவில், “வணக்கம்! எல்லோரும் நலமாக இருக்கிறீர்களா? உங்களையும் பாதுகாத்து, உங்கள் உறவுகளையும் பாதுகாத்து, அதன்மூலமாக இந்த நாட்டையும் பாதுகாக்கும் கடமை எல்லோருக்கும் இருக்கிறது!

தமிழ்நாட்டில் இந்த கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு ஏறக்குறைய 2 மாதமாகிவிட்டது. இப்பொழுது இந்த நோய்த் தொற்றுக்கு 2000-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள்.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்திருக்கிறேன். பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைந்து வருவார்கள் என்ற நம்பிக்கையையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு மாதத்திற்கும் மேல் ஊரடங்கு நீடிப்பதால் லட்சத்திற்கும் அதிகமான சிறு-குறு தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

நாள் சம்பளம் வாங்குபவர்கள், அன்றாட கூலிகள், விவசாயிகள், விற்பனையாளர்கள் என பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களது துன்ப துயரத்தை ஓரளவு துடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒரு வாரத்துக்கு முன்பு 'ஒன்றிணைவோம் வா' - எனும் திட்டத்தை துவக்கினோம்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்துப் பொருட்களை வாங்கிக் கொண்டு போய் தருவதுதான் இந்த திட்டத்தின் ஒரே நோக்கம். கஷ்டப்படுகிறவர்களுக்கு காவல் அரணாக இருப்பதுதான் ஒரே எண்ணம்.

அதற்காகத்தான் 'ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தை தொடங்கினேன். அறிவித்த உடனேயே, இந்த திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்காக 90730 90730 - என்ற பொது தொலைபேசி எண்ணை அறிவித்தேன். இந்தத் திட்டம் தொடங்கியதில் இருந்து இன்றைக்கு வரை 6 லட்சம் பேர் இந்த ஹெல்ப்லைனை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள்.

இதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது!

என் மீதும், தி.மு.க. மீதும் மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையை இது காட்டுகிறது!

ஆட்சியில் இருந்தாலும் இல்லையென்றாலும் மக்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் வந்து நிற்பது தி.மு.க.,தான் என மக்கள் நினைப்பதால்தான், நம்பிக்கை வைத்து இந்த ஹெல்ப்லைனில் பேசியிருக்கிறார்கள்.

இப்படி எந்த அழைப்பு வந்தாலும் அதை உடனே சரி பார்த்து, அதுகுறித்து தீவிரமாக விசாரித்து, மக்களுக்குத் தேவையானப் பொருட்களை எங்களால் முடிந்த அளவுக்கு வாங்கிக் கொண்டு போய் கொடுத்து வருகிறோம்.

“தி.மு.க என்பது மக்கள் அரசாங்கம்; மக்களுக்காக என்றும் துணை நிற்போம்” - மு.க.ஸ்டாலின் பெருமிதம்! (Video)

நாம் அரசாங்கம் கிடையாது. அரசாங்கத்துக்கு இருக்கிற பணமோ, வசதியோ கிடையாது. ஆனாலும் எங்களை நம்பிக் கேட்ட மக்களுக்கு எங்களால முடிந்த உதவிகளைச் செய்வோம். ஏனென்றால், தி.மு.க. என்பது மக்கள் அரசாங்கம்.

தி.மு.க. தொண்டர்களின் உள்ளம் என்பது மாபெரும் கஜானா!

தி.மு.க.,வின் உட்கட்டமைப்பு என்பது வேரிலிருந்து வலுவானது. அந்தக் கட்டமைப்பை வைத்து இந்த இக்கட்டான சூழலிலும் - இந்த கொரோனா காலத்திலும் களத்தில் நிற்கிறோம்.வீ ட்டைவிட்டு வெளியே போகாதீர்கள் என்று சொல்லும் அரசாங்கம், இதனால் பாதிக்கப்படும் மக்களைப் பற்றி எந்தக் கவலையும் படாமல்தான் இருக்கிறது. அப்படி பாதிக்கப்படும் மக்களுக்காக உங்களால் முடிந்த உதவியை நீங்களும் செய்யுங்கள்!

மக்கள் நலனுக்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தி.மு.க.,வும் உங்களுக்குத் துணையாக நிற்கும்!

வாருங்கள் ஒன்றிணைவோம்!

தமிழக மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம்!

நன்றி. வணக்கம்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories