தி.மு.க

“இன்றும் பேராசிரியருக்கான தபால்களோடு வந்த போஸ்ட் மேன்” - மறைவால் கடும் அதிர்ச்சி!

மறைந்த பேராசிரியருக்கு 20 ஆண்டுகாலமாக தபால் கொண்டு வந்த போஸ்ட்மேன், இன்றும் பேராசியருக்கு வந்த தபாலை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

“இன்றும் பேராசிரியருக்கான தபால்களோடு வந்த போஸ்ட் மேன்” - மறைவால் கடும் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் பெருந்தகை உடல்நலக் குறைவு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுச் செய்தி அறிந்து தி.மு.க தலைவர் முதல் கடைநிலைத் தொண்டர்கள் வரை பலரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மறைந்த பேராசிரியரின் உடல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்கள், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் பேராசிரியருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர், இன்று மாலை பேராசிரியரின் உடல் அயனாவரத்தில் உள்ள வேலங்காடு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, பேராசிரியர் அன்பழகனுக்கு வரும் தபால்களை கடந்த 20 ஆண்டுகாலமாக கொண்டுவரும் போஸ்ட்மேன் சிதம்பரம், பேராசிரியருக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார்.

“இன்றும் பேராசிரியருக்கான தபால்களோடு வந்த போஸ்ட் மேன்” - மறைவால் கடும் அதிர்ச்சி!

பேராசிரியர் அன்பழகன் சென்னையில் அண்ணாநகர் வீட்டில் இருந்தாலும் சரி, கீழ்pபாக்கம் வீட்டிலும் சரி, தினசரி தபால் கொண்டு வருபவர் போஸ்ட்மேன் சிதம்பரம். கடந்த 20 ஆண்டுகளாக இவர் தான் பேராசிரியருக்கு வரும் தபால்களை கொடுத்து வந்துள்ளார்.

இன்று காலை பணிக்கு வந்தபோதுதான் பேராசிரியரின் மறைவுச் செய்தி அவருக்கு தெரிய வந்திருக்கிறது. இன்று அவருக்கு வந்த தபாலை எடுத்துக்கொண்டு, அஞ்சலி செலுத்த ஒரு மாலையும் வாங்கிக்கொண்டு சோகத்துடன் கிளம்பி கீழ்ப்பாக்கத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள வீட்டுக்கு வந்துள்ளார் போஸ்ட்மேன்.

அப்போது, பேராசிரியருக்கு அஞ்சலி செலுத்த மக்கள் நீண்ட வரிசையில் நின்றுக் கொண்டிருந்தார்கள். ஆகையால் வெகுநேரம் காத்திருந்தால் தனது வேலை பாதிக்கும்; மற்ற தபால்களை கொண்டு சேர்க்க செய்ய முடியாமல் போகும் என எண்ணியுள்ளார்.

“இன்றும் பேராசிரியருக்கான தபால்களோடு வந்த போஸ்ட் மேன்” - மறைவால் கடும் அதிர்ச்சி!

மேலும், போலிசாரும் உள்ளே விடாமல் தடுத்ததால் சோகத்துடன் இருந்தார் சிதம்பரம். எப்படியாவது கடைசியாக அவரது முகத்தைப் பார்க்க வேண்டுமென ஆசைப்பட்டு போலிசாரிடம் கேட்டபோதும் வாய்ப்பில்லாமல் போயுள்ளது.

வேறு வழியில்லாமல் மாலையையும் பேராசிரியருக்கு வந்த இன்றைய தபாலையும் போலிசாரிடம் கொடுத்து நீங்களே என் சார்பில் அஞ்சலி செலுத்திவிடுங்கள் எனக் கூறிவிட்டு தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு சோகத்துடன் புறப்பட்டுச் சென்றிருக்கிறார் தபால்காரர் சிதம்பரம்.

banner

Related Stories

Related Stories