தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியரின் இறுதி ஊர்வலம் நடைபெற்றுவருகிறது. இறுதி ஊர்வலத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர்.
தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியரின் இறுதிப் பயணம் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு மரியாதை.
“திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும் அரசியல் வித்தகரும் தி.மு.க பொதுச்செயலாளருமான க.அன்பழகன் மறைவுச் செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்தேன்.
பேராசிரியர் என்று தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட அவர் மிகச்சிறந்த பேச்சாளராகவும் அறிஞராகவும் திகழ்ந்தார். அவரது அறிவாற்றல், தாம் கொண்ட கொள்கையின் மீதான தீராத பற்று, மக்கள் நலனுக்கென அவரது உழைத்த அவரது உறுதி போன்ற குணங்கள் நமக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளன.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.”
- துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு
பன்முகத்தன்மை கொண்ட பேராசிரியர் அன்பழகன் மறைவு செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். பேராசிரியர் மறைவுக்கு தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இரங்கல்!
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தங்கபாலு, நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் உள்ளிட்டோர் பேராசிரியர் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மறைந்த பேராசிரியர் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராகிருஷ்ணன் ஆகியோர் மறைந்த பேராசிரியர் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.
பேராசிரியர் தன் வாழ்வில் சம்பாதித்தது மதிப்பும், மரியாதையும்தான். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். - நடிகர் ரஜினிகாந்த் பேட்டி
ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ மறைந்த பேராசிரியர் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் உடலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!
தி.மு.க நிகழ்ச்சிகள் 7 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டு, தி.மு.க கொடி 7 நாட்களுக்கு அரை கம்பத்தில் பறக்கும் - தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.