தி.மு.க

‘கலைஞரின் மனசாட்சி’ முரசொலி மாறனின் 16ம் ஆண்டு நினைவு தினம் - மு.க.ஸ்டாலின் மரியாதை!

முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 16ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

‘கலைஞரின் மனசாட்சி’ முரசொலி மாறனின் 16ம் ஆண்டு நினைவு தினம் - மு.க.ஸ்டாலின் மரியாதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழறிஞர் கலைஞரின் மனசாட்சியாக விளங்கிய முரசொலிமாறன், திராவிட இயக்கத்தின் முன்னோடியாக, தி.மு.கழகத்தின் தூணாக, மூளையாக, மாபெரும் ராஜதந்திரியாகத் திகழ்ந்தவர்.

35 ஆண்டுகாலத்திற்கும் மேலாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முரசொலி மாறன், மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக திறம்பட பணியாற்றி பெரும்புகழ் பெற்றவர். மேலும், எழுத்தாளராக, பத்திரிகையாளராக, திரைப்பட கதாசிரியராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக, இயக்குநராக, தயாரிப்பாளராக பன்முகப் பரிமாணங்கள் கொண்டவர் முரசொலி மாறன்.

நெருக்கடி நிலை காலத்தில் ஓராண்டு மிசா கைதியாக சிறையில் அதிகாரிகளின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஆளானவர். தன் இறுதிக்காலம் வரை கழகத்திற்கோ, தலைவருக்கோ, சிறிதளவுகூட துரோகச் சிந்தனையே இல்லாமல் தி.மு.கழகமே மூச்செனப் பணியாற்றிய பண்பாளர் முரசொலி மாறன்.

‘கலைஞரின் மனசாட்சி’ முரசொலி மாறனின் 16ம் ஆண்டு நினைவு தினம் - மு.க.ஸ்டாலின் மரியாதை!

கடந்த 2003ம் ஆண்டு இயற்கை எய்திய முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 16ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, சென்னை கோடம்பாக்கம் முரசொலி அலுவலத்தில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முன்னாள் அமைச்சர் ஏ.வ.வேலு, மாநிலங்களவை உறுப்பினர் தொ.மு.ச. சண்முகம் உள்ளிட்டோரும் முரசொலி மாறனது சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

முரசொலி மாறனின் நினைவு தினமான இன்று அனைத்து மாவட்டங்களிலும் தி.மு.க சார்பில் முரசொலி மாறன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories