“தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டது தெரியாது; கோவையில் அ.தி.மு.க கொடிக்கம்பத்தால் அனுராதா கால் பறிபோனது தெரியாது. ஊழல் செய்வது மட்டுமே எடப்பாடி பழனிசாமிக்கு நன்றாகத் தெரியும். கடப்பாறையை விழுங்கிவிட்டு ‘கம்’மென இருப்பவர் அவர்.”
-மு.க.ஸ்டாலின் உரை!
தமிழக அமைச்சரவையில் ஊழலின் ஊற்றுக்கண்களாக தங்கமணியும், வேலுமணியும் இருக்கின்றனர். அதனால்தான் எடப்பாடி பழனிசாமி இருவரையும் இரு கண்களாக பாவித்து வருகிறார்.
-மு.க.ஸ்டாலின் உரை!
அமெரிக்காவில் ஓ.பி.எஸ் விருது வாங்கிக் கொண்டிருக்கிறார். உண்மையில் அவருக்கு ஊழல் மகன் என்ற பட்டம் தான் தரவேண்டும்.
-மு.க.ஸ்டாலின் உரை!
ஒன்றல்ல; பலமுறை சிறைக்குச் சென்றவன் நான். சிறை சென்றது கொலை செய்துவிட்டோ, கொள்ளையடித்துவிட்டோ அல்ல! மக்கள் பிரச்னைகளுக்காக பல முறை சிறை சென்றவன் நான்!
-மு.க.ஸ்டாலின் உரை!
பேனர் கலாச்சாரம் ஒழிக்கப்படவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால், அ.தி.மு.க ஆட்சி சட்டவிரோத பேனர் வைத்து மரணத்திற்கு காரணமாகி வருகிறது.
- மு.க.ஸ்டாலின் பேச்சு!
தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக நிறுத்தப்பட்ட வேட்பாளரை வெற்றி பெற வைத்ததற்கு நன்றி.
இந்தியாவிற்கே குரல் கொடுக்கும் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்தமைக்கு தருமபுரி மக்களுக்கு நன்றி.
எந்த பிரச்னையாக இருந்தாலும் தி.மு.க என்ன சொல்கிறது என நாடு முழுவதும் உள்ள கட்சிகள் எதிர்நோக்கி இருக்கிறது என்பது நமக்குப் பெருமை.
- மு.க.ஸ்டாலின் பேச்சு!
“தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; இறுதியில் தர்மமே வெல்லும்” இப்போது தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியுள்ளது இறுதியில் தர்மம் வெல்லும் என்பதை நிரூபிக்கத்தான் தருமபுரியில் இந்தக் கூட்டம்.
- மு.க.ஸ்டாலின் உரை
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றத் தொடங்கினார்.
தி.மு.க பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி உரையாற்றினார்.
தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில்குமார் பேசினார்.
தருமபுரியில் தி.மு.க பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் கடந்த 10ம் தேதி தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.