தி.மு.க

கலைஞரின் ராஜ தந்திரம் ஸ்டாலினிடம் உள்ளது; தேர்தலில் நிச்சயம் வெல்வோம் - துரைமுருகன் உறுதி!

விக்கிரவாண்டியில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கழக பொருளாளர் துரைமுருகன் அரசை விமர்சித்து கடுமையாக பேசியுள்ளார்.

கலைஞரின் ராஜ தந்திரம் ஸ்டாலினிடம் உள்ளது; தேர்தலில் நிச்சயம் வெல்வோம் - துரைமுருகன் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கு வருகிற அக்.,21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பரப்புரையில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் விக்கிரவாண்டி அந்நியூரில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார் கழக பொருளாளர் துரைமுருகன்.

அப்போது அவர் பேசியதாவது,

“தி.மு.க வேட்பாளர் புகழேந்தி 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ராதாமணி இறந்த துக்கத்தில் இந்த தேர்தலை நாங்கள் சந்திக்கிறோம். எங்கள் கட்சி சாதி மதத்திற்கு அப்பாற்பட்டது, அண்ணா கலைஞரிடம் கட்சியையும் ஆட்சியையும் ஒப்படைத்தார். ஆனால் கலைஞர் கட்சியை மட்டும் தளபதியிடம் ஒப்படைத்தார். அதன் பிறகு 39 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டார் தளபதி .

பணம், அதிகாரத்தை வைத்து விக்கிரவாண்டியை வாங்கிவிடலாம் என ஆளும் கட்சியினர் நிற்கிறார்கள். ஆனால் தி.மு.க தலைவர் தளபதியிடம் கலைஞர் கற்றுத்தந்த ராஜத்தந்திரம் இருக்கிறது. கண்டிப்பாக நாங்கள் வெற்றிபெறுவோம்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை தந்தவர் கலைஞர். இந்த சமுதாயத்திற்கு என்ன செய்யவேண்டும் என்று சட்டநாதன் கமிஷனை அமைத்து ராமதாஸை அழைத்து அவர் முன்பு இடஒதுக்கீட்டில் கையெழுத்து போட்டவர் கலைஞர்.

அன்புமணிக்கு கேட்ட இலாக்க கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் ராமதாஸ் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து அன்புமணியை கேபினட் அமைச்சராக உட்கார வைத்தவர் கலைஞர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் முறையாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வரதராஜன் அவர்களை நீதிபதியாக அமர்த்தியவர் கலைஞர். இடஒதுக்கீடு போராட்டத்தில் வன்னிய சமூக மக்களை யார் சுட்டார்களோ அவர்களுடன் தற்போது கூட்டணி வைத்திருக்கிறார் ராமதாஸ்.

தலைவர் கலைஞர், எம்.ஜி.ஆர் உட்கார்ந்த பொருளாளர் இடத்தில் நான் இருக்கிறேன். இந்த பதவியை ராமதாஸ் டம்மி என்று கூறுகிறார். நான் இந்த பதவியில் இருப்பதற்கு நீங்கள் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டாமா.

இடைத் தேர்தலில் 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை வழங்க அ.தி.மு.க திட்டமிட்டுள்ளது. ஆனால் மக்களின் மனம்தான் இந்த தேர்தலில் வெற்றிபெறும். இந்த தேர்தலை ஜாதி கண்ணோட்டத்துடன் பார்க்காதீர்கள். இன்னும் 11 மாதம்தான் இந்த ஆட்சி. அதன் பிறகு தளபதியின் ஆட்சி. அப்போது நந்தன் திட்டம் கால்வாய் திட்டம் நிறைவேறும்.”

என்று அவர் கூறினார்.

banner

Related Stories

Related Stories