பேராசிரியர் மு.பி.பாலசுப்ரமணியன் எழுதிய ‘திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்’ என்கிற நூல் வெளியிட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தி.மு.க பொருளாளர் துரைமுருகன், தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா எம்.பி., உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, திருக்குறளில் எல்லா சமூகத்தில் உள்ள ஒழுங்குமுறைகளும் கூறப்பட்டுள்ளதால்தான் திராவிட இயக்கம் திருக்குறளை உயர்த்திப் பிடித்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் பேசிய ஆ.ராசா, “சங்கத் தமிழ் இலக்கியம் மாசுபட்ட இலக்கியமாகத்தான் காட்சியளித்துக் கொண்டு இருந்தது. மதமும், சாதியும் நஞ்சாகக் கலந்துகொண்டு இருந்தது. அதைத் தூய்மைப் படுத்தத்தான் திராவிட இயக்கம் உருவானது. சமயம் சார்ந்த மொழியை சமத்துவ மொழியாகக் கொண்டு வந்தது திராவிட இயக்கம் தான்.” எனக் குறிப்பிட்டார்.