தி.மு.க

தி.மு.க சார்பில் 24 மணிநேரமும் செயல்படும் ‘குருதிக் கொடை செயலி’ : அறிமுகம் செய்துவைத்த மு.க.ஸ்டாலின்!

இரத்த தானம் அளிக்க, இரத்தம் பெற எந்நேரமும் செயல்படும் மொபைல் செயலியைத் தொடங்கி வைத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

தி.மு.க சார்பில் 24 மணிநேரமும் செயல்படும் ‘குருதிக் கொடை செயலி’ : அறிமுகம் செய்துவைத்த மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இரத்த தானத்தை ஊக்குவிக்கும் வகையில் தி.மு.க மருத்துவ அணி சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் “குருதி தான செயலி”யை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தி.மு.க நிர்வாகிகள் - உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் குருதிக் கொடை வழங்கிட, தி.மு.க மருத்துவ அணி சார்பில் புதிய “தி.மு.க. குருதி தான செயலி”யை (DMK blood donation App) இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அவசர காலத்திலும், அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ காரணங்களுக்காக குருதி தேவைப்படுபவர்கள், இந்த செயலி மூலம் தொடர்பு கொண்டால், அவர்களுக்கு வேண்டிய இரத்த வகை உடனடியாக கிடைத்திட தி.மு.க மாநில மருத்துவ அணி ஏற்பாடு செய்து தரும்.

இந்தச் செயலி 24 மணிநேரமும் செயல்பட, அதற்கான வல்லுநர்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்பார்கள். பொதுமக்கள், கழகத்தினர், குருதி தேவைப்படுவோர் மட்டுமல்லாமல், குருதி தானம் அளிக்க விரும்புவர்கள், தி.மு.க மருத்துவ அணியின் “தி.மு.க குருதி தான செயலி”யை பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க சார்பில் 24 மணிநேரமும் செயல்படும் ‘குருதிக் கொடை செயலி’ : அறிமுகம் செய்துவைத்த மு.க.ஸ்டாலின்!

இந்த செயலியை பயன்படுத்துவது மிகவும் எளிது எனத் தெரிவிக்கும் தி.மு.க மருத்துவ அணி ரத்தம் தேவைப்படுவோர் மற்றும் ரத்த தானம் செய்ய விரும்புவோர் அவர்களது விவரங்களை செயலி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. அதனைத்தொடர்ந்து வல்லுநர்கள் பயனாளர்களை தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை வழங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயலி அறிமுக நிகழ்ச்சியில் மருத்துவர் அணித் தலைவர் பூங்கோதை ஆலடி அருணா, மருத்துவர் அணி துணை செயலாளர் ஆர்.டி‌.அரசு உள்ளிட்ட ஏராளமான தி.மு.க மருத்துவர் அணி மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

banner

Related Stories

Related Stories